வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இயற்கை வைத்தியம்

பொது­வாக உண்­ணும் உணவு செரி­மா­னமா வதற்கு இரைப்­பை­யில் சுரக்­கும் அமி­லம் தான் உத­வி­யாக உள்ளது. ஆனால் இந்த அமி­ல­மா­னது அள­வுக்கு அதி­க­மாக சுரக்­கும்­போது,அவை இரைப்­பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்­றில் எ­ரிச்­சலை உண் டாக்­கு­கி­றது. இவ்­வாறு வயிற்றி ல் ஏற்­ப­டும் அதி­கப்­ப­டி­யான எரிச்­ச­லைத்­தான் அமில சுரப்பு என்று சொல்­வார்­கள்.

இத்­த­கைய அமில சுரப்பு ஏற்­ப­டு­வ­தற்குப் பல கார­ணங்­கள் உள் ளன. அவற்­றில் சரி­யான நேரத்­திற்கு உணவு சாப்பிடா­மல் இருப்­பது, வறுத்த மற்­றும் கார­மான உண­வு­களை அதி­கம் சாப்­பி­டு­வது, அதி­க­மாக புகைப் பிடிப்­பது மற்­றும் மது அருந்­து­வது போன்­ற­வைக் குறி ப்பிடத்­தக்­கவை.

மேலும் காலை உண­வைத் தவிர்ப்பது, வெறும் வயிற்­று­டன் நீண்ட நேரம் இருப்­பது கொழுப்­புள்ள உண­வு­களை அதி­கம் சாப்­பி­டு­வது போன்­ற­வை­யும் அமிலச் சுரப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டியவையே. இத்­த­கைய அமில சுரப்­பைச் சில அறி­கு­றி­கள் கொண்டு அறி­யலாம்.

அவை நெஞ்­செ­ரிச்­சல், குமட்­டல், வாந்தி, உணவு உண்டபின் ஒரு மணி நேரத்­தில் இருந்து நான்கு மணி நேர த்திற்­குள் வயிற்­றில் வலி அல்­லது எரிச்­சல் ஏற்­ப­டு­வது, அடிக்­கடி ஏப்­பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்­கடி பசி எடுத்­தல் போன்­றவை.

ஆகவே இத்­த­கைய அறி­கு­றி­கள் இருந்­தால், அப்­போது உடனே அத னை குணப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­யில் ஈடு­பட வேண்­டும். இல்­லா­விட்­டால், அவை பெரும் பிரச்­சனை யை உண்­டாக்­கி­வி­டும். அதிலு ம் அமில சுரப்­பைப் போக்­கு­வத ற்கு எங்­கும் செல்ல வேண்­டாம்.

அதனை சரி செய்ய பல இயற் கை முறை­கள் உள்­ளன. அவை களைப் பின்­பற்றி வந்­தாலே, அமி­ல­ச்சு­ரப்பை எளி­தில் குணப் படுத்­த­லாம்.

தண்­ணீர்

தின­மும் காலை­யில் எழுந்­த­தும், வெறும் வயிற்­றில் இரண்­டு­கோப் பை தண்­ணீர் குடித்து வந்­தால், அமில சுரப்பு வரா­மல் தடுக்­க­லாம்.

முட்­டை­கோஸ்

இதன் சாறை நாள்­தோ­றும் அருந்தி வந்­தால் அமில சுரப்­பில் இருந்து நிவா­ர­ணம் கிடைக்­கும்.

மோர்

மோரு­டன் ஒரு மேசை கரண்டி கொத்த மல்லி சாறு கலந்து தின­மும் குடித்து வந்­தால், அமில சுரப்பு க்கு நல்ல தீர்வு கிடைக்­கும்.

கிராம்பு

கிராம்பு மிக­வும் கார­மா­கத்­தான் இருக்கு ம். இருப்­பி­னும் அதனை வாயில் போட்டு மென்று சாப்­பிட்­டால், அமில சுரப்பு பிரச்ச னையைப் போக்­க­லாம்.

தேன் மற்­றும் அப்­பிள்

உணவு உண்­ணு­முன் ஒரு மேசை கரண்டி தேனு­டன், இரண்டு மேசை கரண்டி அப்­பிள் சாறு கலந்து குடித்­தால், அமில சுரப்பு வரா­மல் தவிர்க்­க­லாம்.

புதினாசாறு

உண­வைச் சாப்­பிட்டு முடித்­த­பின், கொதிக்கு ம் நீரில் புதினா இலை­யைப்­போட்டு கொதி க்கவிட்டு, பின்­கு­ளிர வைத்து குடித்­தால், அமில சுரப்­புக்கு நல்ல தீர்வு கிடைக் கும்.

இள­நீர்

பல மருத்­துவ குணம் கொண்ட இள­நீரை, தின­மும் காலை­யில் வெறும் வயிற்­றில் குடித்­தால் அமில சுரப்பு குண­ம­டை­யும்.

வெள்­ள­ரிக்­காய்

வெள்­ள­ரிக்­கா­யில் நீர்ச்­சத்து அதி­கம் உள்­ளது. அத்­த­கைய வெள்­ள­ரிக்கா யை தின­மும் சாப்­பிட்டு வந்­தால், அமில சுரப்­புக்கு நல்ல நிவா­ர­ணம் கிடைக்­கும்.

துளசி இலை

அமில சுரப்பு, வாயு­தொல்லை, குமட்டல் போன்­ற­வற் றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவா­ரணி யாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close