வரலாற்றைக் காப்போம்!!

போர் முடிந்து 9 ஆண்­டு­கள் நிறை­வ­டை­யும் இந்­த­வே­ளை­யி­லும் விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­க­ளைத் தேடும்­ப­ட­ல­மும் அவற்­றைத் தோண்­டி­யெ­டுக்­கும் பணி­க­ளும் வெகு தீவி­ர­மாக நடந்து வரு­கின்­றன. அடிக்­கடி ஆயு­தங்­க­ளைத் தேடி தோண்­டும் பட­ல­மும் நடக்­கி­றது. ஒரு­பு­றத்­தில் ஆயு­தங்­க­ளைத் தேடும் பட­லம் நடந்­து­கொண்­டி­ருக்­கை­யில் மறு­பு­றத்­தில் புலி­கள் புதைத்து வைத்­த­னர் என்று நம்­பப்­ப­டும் தங்­கத்­தைத் தேடும் பட­ல­மும் மும்­மு­ர­மாக நடக்­கி­றது.

புலி­கள் புதைத்து வைத்­த­னர் என்று கூறப்­ப­டும் பெரும் தொகை­யான தங்­கப் புதை­யலை மீட்­ப­தற்­காக நடத்­தப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்­வ­மான பல தேடு­தல் நட­வ­டிக்­கை­கள் இறு­தி­யில் தோல்­வி­யி­லேயே முடிந்­தன. ஆனா­லும் அடிக்­கடி தேடு­தல்­கள் நடந்­து­கொண்டே இருக்­கின்­றன. இதற்­குப் பின்­ன­ணி­யில் உள்ள கார­ணம் , அத்­த­கைய புதை­யல் குறித்து அரச படை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டும் உள­வுத் தக­வல்­கள்­ தான்.

புலி­க­ளின் தங்­கத்தை அடை­வ­தற்கு முயற்­சிக்­கும் பல குழுக் க­ளுக்கு மத்­தி­யில் நடக்­கும் போட்­டி­யின் கார­ண­மாக ஒரு குழு அந்­தத் தங்­கத்தை எடுத்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக அடுத்த குழு அந்­தத் தங்­கம் குறித்த தக­வல்­க­ளைப் போட்­டுக்­கொ­டுக்­கும் பணி­யைக் கச்­சி­த­மா­கச் செய்­கின்­றன. இத­னா­லேயே அடிக்­கடி புதை­யல் தேடும் பட­லங்­கள் நடக்­கின்­றன.

இந்­தத் தங்க வேட்­டை­யில் ஆர்­வம் கொண்­டி­ருக்­கும் சில கள­வுக் குழுக்­கள் தீவி­ர­மான தேடு­த­லில் தங்­கம் அகப்­ப­டு­கின்­றதோ இல்­லையோ ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கும் இடங்­கள் அகப்­பட்­டு­வி­டு­கின்­றன. ஆயு­தங்­கள் தோண்­டி­யெ­டுக்­கப்­ப­டு­வது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டி­யதே! அவை இது­போன்ற சட்­டத்­துக்­குப் புறம்­பான குழுக்­க­ளின் கைக­ளில் அகப்­பட்டு அத­னால் மோச­மான விளை­வு­க­ளைச் சமூ­கம் சந்­திப்­ப­தற்­குப் பதில் அவை தோண்­டி­யெ­டுக்­கப்­பட்டு அழிக்கப்­ப­டு­வ­தும் அவ­சி­யமே!

ஆனால், இந்­தத் தங்­க­வேட்­டை­யில் ஈடு­ப­டும் குழுக்­கள் வெறு­மனே புலி­க­ளின் தங்­கத்தை மட்­டும் தேட­வில்லை, வன்­னிக் காடு­க­ளுக்கு உள்ளே புதைந்­து­கி­டக்­கும் வர­லாற்­றுப் பொக்­கி­சங்­க­ளில் இருந்­தும் புதை­யல் தேடு­கின்­றன.

வன்­னி­யின் அடர்ந்த காடு­க­ளுக்கு உள்ளே தமி­ழர்­க­ளின் தொன்மை வர­லாற்­றைக் குறிக்­கும் பல அரிய வர­லாற்று எச்­சங்­கள் இன்­னும் கிடக்­கின்­றன. கிட்­டத்­தட்ட 3 ஆயி­ரம் வரு­டங்­க­ளுக்­கும் அதற்கு முந்­தி­ய­து­மான வர­லாற்று ஆதா­ரங்­க­ளும் எச்­சங்­க­ளும் மரங்­க­ளால் சூழப்­பட்டு மறைக்­கப்­பட்­டுக் கிடக்­கின்­றன. அவற்­றுக்­குள்ளே வைர­மும் வைடூ­ரி­யங்­க­ளும் தங்­க­மும் புதைந்து கிடக்­கின்­றன என்று நம்­பும் இந்­தக் கள­வுக் குழுக்­கள் அவற்­றை­யும் உடைத்து, அழித்து சேதப்­ப­டுத்தி புதை­யல் தோண்டி வரு­கின்­றன.

வர­லாற்று ஆதா­ரங்­க­ளான இந்த இடங்­க­ளைக் கண்­ட­றிந்து ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்­டிய தொல்­லி­யல்­து­றை­யி­னர் அது பற்­றிய அக்­கறை ஏதும் இன்றி இருக்­கும் நிலை­யில் இத்­த­கைய கள­வுக் குழுக்­க­ளால் இந்த வர­லாற்று ஆதா­ரங்­கள் கடும் ஆபத்­துக்கு உள்­ளா­கின்­றன.

வடக்­கில் இருக்­கும் வர­லாற்று ஆதா­ரங்­கள் என்­ப­தாலோ அல்­லது அத்­த­கைய ஆதா­ரங்­க­ளைக் கொண்டு நடத்­தப்­ப­டும் ஆய்­வு­க­ளின் மூலம் தமி­ழர்­க­ளின் தொன்மை இந்த நாட்­டில் நிரூ­பிக் கப்­பட்­டு­வி­டும் என்று கரு­து­வ­தாலோ என்­னவோ இந்த வர­லாற்­றா­தா­ரங்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்கோ அங்கு ஆய்­வு­களை நடத்­து­வ­தற்கோ இலங்­கை­யின் தொல்­லி­யல்­துறை அக்­கறை செலுத்­து­வ­தில்லை என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­றார்­கள்.

இத்­த­கைய இடங்­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டும் விரி­வான ஆய்­வு­கள் இலங்­கை­யில் இது­வ­ரை­யில் புனைவு இலக்­கி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் கட்­ட­மைப்­பட்­டி­ருக்­கும் வர­லாற்­றைத் தலை­கீ­ழா­கப் புரட்­டிப் போட்­டு­வி­டக்­கூ­டும் என்­கிற அச்­சம் இந்­தப் புறக்­க­ணிப்­புக்­குக் கார­ணம் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­றார்­கள்.

அவர்­க­ளின் அச்­சம், கோபம் என்­பன நியா­ய­மா­னவை. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு ஒன்­றைக் காண்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் இலங்கை ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டும் இந்­த­வே­ளை­யில் நாட்­டின் வர­லாற்­றைக் காய்த்­தல் உவத்­தல் இன்றி நேர்­மை­யா­கச் சொல்­லக்­கூ­டிய உண்­மை­யான ஆய்­வு­க­ளும் ஊக்­கு­விக்­கப்­ப­ட­வேண்­டும். அதன் மூலமே தவ­றான கற்­பி­தங்­க­ளும் அதன் வழி கட்­ட­மைக்­கப்­பட்ட மேலாண்­மைக் கருத்­தி­யல்­க­ளும் இன­வா­தக் கருத்­து­ரு­வாக்­கங்­க­ளும் கட்­டு­டைக்­கப்­ப­ட­மு­டி­யும்.

எனவே கொள்­ளைக் கும்­பல்­கள் இந்த வர­லாற்று ஆதா­ரங்­களை முற்­றி­லு­மாக அழித்­துப் புதை­யல் வேட்டை நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக தொல்­லி­யல்­து­றை­யி­னர் இது குறித்­துத் தீவி­ர­மா­கக் கவ­னம் செலுத்தி வர­லாற்­றுப் பொக்­கி­சங்­க­ளைப் பாது­காக்க முன்­வ­ர­வேண்­டும். அதன் மூலமே இலங்­கை­யின் உண்மை வர­லாற்றை நிலை­நி­றுத்த முடி­யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close