வலி.வடக்­கில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பி­லுள்ள -வீடு­கள், மதில்­கள் புல்­டோ­ச­ரால் இடித்­த­ழிப்பு!!

வலி.வடக்­கில் கட்­டு­வன் -– மயி­லிட்டி வீதி­யின் கிழக்­குப் பகு­தி­யில் இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­பி­லுள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­க­ளில் எஞ்­சி­யி­ருக்­கும் வீடு­கள், மதில்­கள் என்­ப­வற்றை புல்­டோ­சர் பயன்­ப­டுத்தி இடித்­த­ழிக்­கும் நட­வ­டிக்­கை­கள் கடந்த ஒரு வார கால­மாக இரா­ணு­வத்­தி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ளன.

பற்­றை­கள் வெட்டி அகற்­றப்­பட்டு, வீடு­கள் இடித்­த­ழிக்­கப்­பட்டு வெட்­ட­வெ­ளி­யான நிலத்­தைப் பண்­ப­டுத்தி, தென்­னம்­பிள்­ளை­கள் நடும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் இரா­ணு­வத்­தி­னர் மேற்­கொண்­டுள்­ள­னர். இரா­ணு­வத்­தின் இந்த நட­வ­டிக்கை தமது காணி­கள் இனி­ஒ­ரு­போ­தும் விடு­விக்­கப்­பட மாட்­டாதா என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

வலி. வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த 28ஆவது ஆண்டு நிறை­வு­நாள் நாளை வெள்­ளிக்­கி­ழமை கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் இரா­ணு­வத்­தி­னர் இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி, மகிந்த ஆட்­சிக் காலத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்த ஹந்­து­ரு­சிங்­க­வின் காலத்­தில், வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யத்­தி­லி­ருந்த வீடு­கள் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

2014ஆம் ஆண்­ட­ள­வில் அந்த நட­வ­டிக்கை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் மக்­கள் காணி­கள் வலி. வடக்­கில் படிப்­ப­டி­யாக கைய­ளிக்­கப்­பட்­டது.

அண்­மை­யில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு வலி.வடக்­கில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தின் எல்­லை­யில் இரா­ணு­வத்­தி­னர் புதிய பாது­காப்பு வேலி அமைத்­த­னர். புதி­தாக அமைக்­கப்­பட்ட வேலி­யி­னால் எல்­லைப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தே­சத்­தி­லுள்ள வீடு­களே இரா­ணு­வத்­தி­ன­ரால் தரை­மட்­ட­மாக்­கப்­பட்டு வரு­கின்­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close