வல்­வைப் படு­கொலை நினை­வு கூ­ரப்­ப­ட­வில்லை

0 257

இந்­திய இரா­ணு­வத்­தால், அமை­தி­யைக் காக்க வந்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறிய அவர்­க­ளால், வல்வை மண்­ணில் நடந்த மிகக் கொடூ­ர­மான படு­கொலை நேற்­றைய தினம் எந்­த­வொரு தரப்­புக்­க­ளா­லும் நினை­வு­கூ­ரப்­ப­ட­வில்லை.

இலங்கை இரா­ணு­வத்­துக்கு இணை­யாக இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரால் தமிழ் மக்­கள் மீது நிகழ்த்­தப்­பட்ட இனப்­ப­டு­கொ­லையை, தமிழ்த் தேசி­யம் பேசு­கின்ற எந்­த­வொரு தரப்­பி­ன­ரும், குறிப்­பாக இவ்­வா­றான படு­கொ­லை­கள் தொடர்­பில் நினை­வேந்­தல்­களை நிகழ்த்­து­கின்ற மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கூட நினை­வு­கூ­ரா­தமை தொடர்­பாக மக்­கள் விச­னம் வெளி­யிட்­ட­னர்.

வல்வை மண்­ணின் மாகாண சபை உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு அவர்­கூட இந்­தப் படு­கொலை தொடர்­பான நினை­வேந்­தலை நடத்­தாமை கவ­லை­ய­ளிப்­ப­தாக வல்­வெட்­டித்­துறை மக்­கள் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

இந்­திய இரா­ணு­வம் அமை­திப்­ப­டை­யாக, தமி­ழர் தாய­கத்­தில் காலடி எடுத்து வைத்த பின்­னர் பல்­வேறு படு­கொ­லை­களை செய்­தது. வல்­வெட்­டித்­து­றைச் சந்­தைப் பகு­தி­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான தாக்­கு­த­லில் அடி­வாங்­கிய இந்­திய இரா­ணு­வம், தமிழ் மக்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தி­யது.

1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இந்­தத் துர்­பாக்­கிய நிகழ்வு நடந்­தது. இந்­திய இரா­ணு­வம் ஆண், பெண், சிறு­வர், முதி­ய­வர் வேறு­பா­டின்றி கொலை­வெ­றி­யாட்­டம் நடத்­தி­யது. 63 பேர் சுட்­டும், எரித்­தும் அகோ­ர­மா­கப் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். நூற்­றுக்கு மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர். 123 வீடு­கள் சேத­மாக்­கப்­பட்­டன. 45 கடை­கள் சூறை­யா­டப்­பட்­டன. 176 வள்­ளங்­கள் எரித்­துச் சாம்­ப­ராக்­கப்­பட்­டன.

தமி­ழர் வர­லாற்­றில் துயர்­பொ­திந்த இந்த நினை­வு­நாளை எந்­த­வொரு தரப்­பி­ன­ரும் நேற்­றைய தினம் கடைப்­பி­டிக்­க­வில்லை. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், தமி­ழர் தாய­கத்­தில் நடந்த பல்­வேறு இனப்­ப­டு­கொ­லை­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல்­களை நேர­டி­யா­கச் செய்து வரு­ப­வர்.

அவர்­கூட இந்த நினை­வேந்­தலை நடத்­தாமை தொடர்­பில் மக்­கள் பல­ரும் விச­னம் வெளி­யிட்­ட­னர். இது தொடர்­பில் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தி­டம் கேட்­ட­போது, “365 நாளுமே இனப்­ப­டு­கொலை நடந்­தி­ருக்­கின்­றது” என்று பதி­ல­ளித்­தார்.

You might also like