வவுனியாவில் கடின பந்து பயிற்சித் திடல் அமைப்பு!!

வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்துக்கான கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதியொதுக்கீட்டில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like