வாள்­வெட்­டில் இளை­ஞர் காயம் மருத்­து­வ­ம­னைக்­குள் அடா­வடி!

சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றுக் களே­ப­ரம்

வாள்­வெட்­டில் காய­ம­டைந்த ஒரு­வர் அவ­ரது நண்­பர்­க­ளால் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றுப் பிற்­ப­கல் 6.15 மணி­ய­ள­வில் சேர்க்­கப்­பட்­டார். அதன்­பின்­னர் குழு ஒன்று மருத்­து­வ­மனை வளா­கத்­துக்­குள்­ளும் அடா­வ­டி­யில் ஈடு­பட்­டது. அத­னால் அங்கு பதற்ற நிலமை ஏற்­பட்­டது.

வரணி இயற்­றா­ளைப் பகு­தி­யில் வைத்து ஒரு­வர் மீது வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. வாள்­வெட்­டில் காய­ம­டைந்­த­வர் 19 வய­து­டை­ய­வர் என்­றும், அவ­ரது முது­கில் பெரும் வெட்­டுக்­கா­யங்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­து­டன் அவ­ருக்கு 30க்கு மேற்­பட்ட தையல் போடப்­பட்­டுள்­ளது என்று மருத்­து­வ­ம­னைத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இந்­த­நி­லை­யில் இரவு 7 மணி­ய­ள­வில் குழு ஒன்று சாவ­கச்­சேரி மருத்­து­வ­மனை வளா­கத்­துக்கு வந்­துள்­ளது. காய­ம­டைந்து மரு­த்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­வ­ரு­டன் நின்­ற­வர்­க­ளைத் தாக்கி அடா­வ­டி­யில் ஈடு­பட்­டுள்­ளது. அத­னால் அங்கு பெரும் களே­ப­ரம் ஏற்­பட்­டது.

இது தொடர்­பா­கப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. தாக்­கு­தலை நடத்­தி­விட்டு அந்­தக் குழு வெளி­யேற முயன்ற சம­யம் பொலி­ஸார் வந்­துள்­ள­னர். அதை­ய­டுத்து அந்­தக் குழு தமது உந்­து­ரு­ளி­க­ளைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­றுள்­ளது.

பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். 7 மோட்­டார் சைக்­கிள்­கள் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக நேற்­றி­ர­வு­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like