விசித்திர பப்பாசி மரம் – வியப்பில் மக்கள்!

0 116

கிண்ணியா – மாஞ்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் விசித்திர பப்பாசி மரமொன்று வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய பப்பாசி மரங்களில் போன்று மரத்துடன் ஒட்டியவாறு பப்பாசிக் காய்கள் காய்க்காது மரத்திலிருந்து கொடி போன்ற அமைப்பு வந்து அதில் பப்பாசிகாய்கள் காய்த்துள்ளன.

இது தொடர்பில் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இவ்வாறானதொரு பப்பாசி மரத்தை தாம் பார்த்ததில்லை என வியப்புடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை இந்த விசித்திர பப்பாசி மரத்திலுள்ள பழங்களை உட்கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

You might also like