விண்­ணில் பாய்ந்­தது ராவணா-1

இலங்கை வர­லாற்­றில் முதன் முறை­யாக இலங்­கை­யர்­கள் இரு­வ­ரின் முயற்­சி­யில் நிர்­மா­ணிக் கப்­பட்ட ‘ராவணா 1’ செயற்­கைக்­கோள் நேற்று வியா­ழக்­கி­ழமை விண்­ணுக்கு வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­ட­தாக நாசா நிறு­வ­னம் தெரி­விக்­கின்­றது.

இலங்கை நேரப்­படி நேற்று அதி­காலை 2.16 மணி அள­வில் இந்த செயற்­கைக்­கோள் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து விண்­ணுக்கு ஏவப்­பட்­டுள்­ளது.

தரிந்து தயா­ரத்ன மற்­றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்­கை­யர்­க­ளால் தயா­ரிக்­கப்­பட்ட ‘இரா­வணா 1’ செய்­மதி கடந்த பெப்­ர­வரி மாதம் 18ஆம் திகதி ஜப்­பான் விண்­வெளி ஆய்வு நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இவ்­வாறு கைய­ளிக்­கப்­பட்ட ‘ராணவா 1’ செய்­ம­தி­யு­ட­னான ரொக்­கெட், அமெ­ரிக்­கா­வின் வர்­ஜி­னி­யா­வி­லி­ருந்து நேற்று அதி­காலை, பன்­னாட்டு விண்­வெளி ஆய்வு மத்­திய நிலை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இலங்கை, ஜப்­பான் மற்­றும் நேபா­ளம் ஆகிய நாடு­கள் இணைந்து மூன்று சிறி­ய­ரக செய்­ம­தி­களை நேற்று விண்­ணுக்கு ஏவின. பன்­னாட்டு விண்­வெளி மத்­திய நிலை­யத்­தி­லி­ருந்து 400 கிலோ­மீற்­றர் தூரத்­தில் ‘ராவணா 1’ செயற்­கைக்­கோளை நிலை­நி­றுத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்த செயற்­கைக்­கோ­ளின் ஆயுட்­கா­லம் ஒன்­றரை வரு­டம் என அறி­விக்­கப்­பட்­டுள்ள போதி­லும், ஐந்து வரு­டங்­கள் அதன் பயன்­பாட்டை பெற்­றுக்­கொள்ள முடி­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

You might also like