விபத்­தில் ராணு­வப் பொலிஸ் உயிரிழப்பு!!

முல்­லைத்­தீவு, 3ஆம் கட்­டைப் பகு­தி­யில் நேற்று மாலை நடந்த விபத்­தில் இரா­ணு­வப் பொலிஸ் அலுவலர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மற்­றொ­ரு­வர் காய­ம­டைந்­துள்­ளார்.

முல்­லைத்­தீ­வில் இருந்து முள்­ளி­ய­வளை நோக்­கிச் சென்ற கன்­ரர் ரக வாக­னம் ஒன்று வற்­றாப்­ப­ளை­யில் இருந்து வந்த உந்­து­ரு­ளி­யு­டன் ஏற்­ப­ட­வி­ருந்த விபத்­தைத் தவிர்க்க முயன்­ற­போது வீதியை விட்டு விலகி வீதி­யோ­ரம் கட­மை­யில் இருந்த இரா­ணு­வப் பொலிஸ் உத்­தி­யுா­கத்­தர்­கள் மீது மோதி­யது என்று கூறப்­ப­டு­கின்­றது.

அம்­பா­றை­யைச் சேர்ந்த எஸ்.பத்­தி­ரண (வயது-22) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார். பொல­ன­று­வை­யைச் சேர்ந்த திசா­நா­யக்க (வயது-32) என்­ப­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார்.

விபத்தை ஏற்­ப­டுத்­திய வாக­னத்­தின் சாரதி முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இவர் முள்­ளி­ய­வளை, குமா­ர­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­ட­பது. விபத்­துத் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­கள் பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

You might also like