விபத்­துக்­க­ளில் காய­ம­டைந்த இரு­வர் உயி­ரி­ழப்பு!!

கிளி­நொச்­சி­யில் நடந்த இரு வேறு விபத்­துக்­க­ ளில் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்­று­வந்த இரு­வர்சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கடந்த 29ஆம் திகதி கிளி­நொச்­சி­யில் நடந்த மதம் சார்ந்த கூட்­டம் ஒன்­றில் பங்­கு­கொள்­ளும் நோக்­கில் கொழும்பு, ஜம்­பட்டா வீதி­யைச் சேர்ந்த கும­ரன் சர்­மிளா என்ற 47 வய­துப் பெண் தனது மகன், மகள் ஆகி­யோ­ரு­டன் கிளி­நொச்­சிக்கு வந்­தி­ருந்­தார்.

அவர்­கள் கிளி­நொச்­சி­யில் இருந்து பரந்­த­னில் உள்ள உண­வ­கத்­துக்­குச் சென்று உண­வ­ருந்­தி­விட்­டுக் கால்­ந­டை­யாக இருப்­பி­டம் திரும்­பி­ய­போது கிளி­நொச்­சி­யில் இருந்து வந்த முச்­சக்­கர வண்டி ஒன்று அவர்­களை மோதி­யது.

விபத்­தில் மூவ­ரும் காய­ம­டைந்­தி­ருந்­த­நி­லை­யில் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் சர்­மிளா மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அவ­ருக்­குச் சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார்.

அதே­வேளை, கன­டா­வில் இருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த செ.சுந்­த­ரேஸ்­வ­ரன் (வயது-71) என்­ப­வர் கடந்த 28ஆம் திகதி விபத்­தில் சிக்­கி­யி­ருந்­தார். வேல­ணை­யைச் சேர்ந்த அவர் விசு­வ­ம­டு­வில் உள்ள தனது காணி­யைப் பார்க்­கச் சென்­றுள்­ளார்.

பார்த்­து­விட்டு உந்­து­ரு­ளி­யில் திரும்­பி­ய­போது நிலை­த­டு­மாறி வெள்­ள­வாய்க்­கா­லுக்­குள் தடம்­பு­ரண்டு விபத்­துக்­குள்­ளா­னார். அவர் உட­ன­டி­யாக பூந­கரி மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு, அங்­கி­ருந்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அவ­ருக்­குச் சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில் சிகிச்சை பய­னின்றி நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்த உயி­ரி­ழப்­புக்­கள் தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யின் திடீர் மரண விசா­ரணை அதி­காரி.ந.பிறேம்­கு­மார் மேற்­கொண்­டார்.

You might also like