விவாதத்தைக் கிளப்பும்- வேட்பாளர் தெரிவு!!

தமி­ழ­கத்­தின் முதன்­மைக் கட்­சி­க­ளான திமுக, அதி­முக சார்­பில் மக்­க­ள­வைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளில் ஒரு­வர்­கூட முஸ்­லிம் இல்லை என்­பது பலத்த விவா­தத்­தைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது. இன்­றைக்­குத் தமி­ழக அர­சி­யல் சூழலை திரா­வி­டக் கட்­சி­களே தீர்­மா­ னிக்­கின்­றன என்­ப­தால் மட்­டு­மல்ல, திரா­விட இயக்­கத்­தின் அர­சி­யல் வர­லாறே சிறு­பான்­மை­ யி­ன­ரை­யும் அவர்­க­ளது உரி­மைக்­கான போராட்­டங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­யது என்­ப­தால்­தான் இந்த விட­யம் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கொண்­ட­தா­கி­றது.

முன்பே தொடங்­கி­விட்­டது
தற்­போ­தைய மக்­க­ள­வைத் தேர்­த­ளலில்­தான் முஸ்­லிம்­கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்று இந்­தப் பிரச்­சி­னை­யைச் சுருக்­கி­வி­ட­வும் முடி­யாது. கடந்த தேர்­த­லி­லேயே அதற்­கான அறி­கு­றி­கள் தென்­பட ஆரம்­பித்­தன. 2014ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லில் அதி­மு­க­வும் திமு­க­வும் தங்­க­ளது கட்­சி­யின் சார்­பாக ஒரே­யொரு முஸ்­லிம் வேட்­பா­ள­ரைத்­தான் நிறுத்­தி­யி ­ருந்­தன. அது­வும் ஒரே தொகு­தி­யில். ராம­நா­த­பு­ரம் முஸ்­லிம் வாக்­கு­வங்கி அதி­கம் உள்ள தொகுதி என்­ப­தால் இருக்­க­லாம்.

சிறு­பான்­மை­யி­னர் ஒரு அர­சி­யல் கட்­சி­யோடு இணைந்து பணி­யாற்­றும்­போது அந்­தக் கட்­சி­யின் கொள்­கை­களை மட்­டு­மல்ல, தான் சார்ந்த சிறு­பான்மை இனத்­தின் குரல்­க­ளை­யும் சேர்த்தே எதி­ரொ­லிக்­கி­றார்­கள். தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை, முஸ்­லிம் சமூ­கத் தலை­வர்­கள் தனிக்­கட்­சி­களை ஆரம்­பித்­துப் முதன்­மைக் கட்­சி­க­ளு­டன் தொகு­திப் பங்­கீ­டு­க­ளைப் பெறு­வ­தில் ஆர்­வம் காட்­டு­கி­றார்­கள். கூட்­ட­ணி­யின் பலத்­தோடு தங்­கள் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யி­டு­வதை விரும்­பு­கி­றார்­கள். அதே­நே­ரத்­தில், முதன்­மைக் கட்­சி­க­ளி­லும் தங்­க­ளது சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­குப் போதிய இடங்­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர்.

சிறு­பான்­மை­யி­ன­ரின் பிர­தி­நி­தித்­து­வம்
‘’முஸ்­லிம்­க­ளுக்­குக் கட்­சிக்­குள் பிர­தி­நி­தித்­து­வம், கூட்­ட­ணி­யி­லும் வாய்ப்பு என்று இரண்டு வகை­க­ளி­லும் எப்­படி இடங்­களை ஒதுக்க முடி­யும், அது மற்ற சமூ­கங்­க­ளுக்கு இடங்­கள் ஒதுக்­கு­வ­தைப் பாதிக்­குமே என்­ப­து­தான் முதன்­மைக் கட்­சி­க­ளின் பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது’’ என்று சொல்­லப்­ப­டு­கி­றது. சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கும் எந்­த­வொரு சமூ­கத்­துக்­கும் பொது­வான பிரச்­சி­னை­தான் இது. ஆனால், இந்த இரண்டு வாய்ப்­பு­க­ளை­யுமே அவர்­கள் பெறு­வ­தற்­கான நியா­ய­மும் இருக்­கி­றது. சிறு­பான்­மை­யி­னர் தங்­க­ளுக்­கான அர­சி­ய­லைப் பேசு­வ­தற்­கான தனி­ய­மைப்­பு­க­ளும் வேண்­டும். அதே­நே­ரத்­தில், அவர்­கள் தனித்து ஒதுங்­கி­வி­டா­மல் அர­சி­யல் பொது நீரோட்­டத்­தி­லும் பங்­கெ­டுத்­துக்­கொள்ள வேண்­டும்.

இந்­திய ஜன­நா­யக வர­லாற்­றில் இன்­ன­மும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு அவர்­க­ளது மக்­கள்­தொ­கைக்­கு­ரிய பிர­தி­நி­தித்­து­ வம் கிடைக்­க­வில்லை என்­ப­து­தான் உண்­மை­நிலை. 2011ஆம் ஆண்­டின் மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­பின்­படி இந்­தி­யா­வில் 14.2 சத­வீத முஸ்­லிம்­கள் இருக்­கி­றார்­கள். மக்­கள் தொகை­யின் அடிப்­ப­டை­யில் முஸ்­லிம்­க­ ளுக்கு 70 இடங்­க­ளா­வது இருக்க வேண்­டும். ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லில் 22 பேர் மட்­டுமே தேர்­த­லில் வெற்­றி­பெற்­றார்­கள். மக்­க­ள­வை­யின் மொத்த உறுப்­பி­னர்­க­ளோடு ஒப்­பி­டும்­போது அவர்­க­ளின் எண்­ணிக்கை என்­பது வெறும் 4.24 வீதம் மட்­டுமே. 1980ஆம் ஆண்­டு­க­ளில் இது 9 வீத­மாக இருந்­தது.

‘வழி­வ­குத்த’ பாஜக
1952ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லுக்­குப் பிறகு இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் முஸ்­லிம்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­தது கடந்த 2014ஆம் ஆண்­டின் மக்­க­ள­வைத் தேர்­த­லின்­போ­து­தான். அதற்கு அப்­போது இந்­தியா முழு­வ­தும் உரு­வாக்­கப்­பட்ட பாஜக ஆத­ரவு அலைக்­கும் ஒரு முக்­கி­யப் பங்­கி­ருக்­கி­றது. பாஜக 1980க்கும் 2014க்கும் இடைப்­பட்ட தேர்­தல்­க­ளில் மொத்­தமே 20 முஸ்­லிம் வேட்­பா­ளர்­க­ளுக்­குத்­தான் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்­தி­ருக்­கி­றது. இவர்­க­ளில் மூன்று பேர் மட்­டுமே வெற்­றி­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

அணு­கு­முறை மாறட்­டும்
இந்த நடை­மு­றைப் பிரச்­சி­னை­க­ளால் முஸ்­லிம்­கள் மட்­டு­மல்ல, கிறிஸ்­த­வர்­க­ளும் பாதிப்பை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். சிறு­பான்­மை­யி­னர் தங்­க­ளுக்­கான தனி­ய­மைப்­பு­களை உரு­வாக்­கிக்­கொள்­ளட்­டும். அதே­ச­ம­யத்­தில், அவர்­களை முதன்­மைக் கட்­சி­கள் தங்­க­ளோடு தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் வேண்­டும். இது தேர்­தல்­சார்ந்த அணு­கு­முறை மட்­டு­மல்ல. அதுவே ஜன­நா­ய­கத்­தின் நோக்­க­மும்­கூட.

You might also like