வீட்­டா­ரைத் தாக்கி -17 பவுண் நகைகள் கொள்ளை!!

அரச அலு­வ­லர்­க­ளான கண­வன் மற்­றும் மனை­வியை அச்­சு­றுத்­தித் தாக்கி 17 பவுண் நகை­யைக் கொள்­ளை­யர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­தா­கப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

காய­ம­டைந்த மனை­விக்கு 6 இழை தையல் போடப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

யாழ்ப்பாணம் தெல்­லிப்­பழை கட்­டு­வன் புலம் வீதி, கட்­டு­வன் பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை 1.30 மணிக்கு இடம்­பெற்­றுள்­ளது.
இது தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது:

குளி­ய­லறை ஜன்­னல் ஊடாக வீட்­டுக்­குள் 3 கொள்­ளை­யர்­கள் நுழைந்­துள்­ள­னர். நித்­தி­ரை­யில் இருந்த வீட்­டாரை எழுப்பி, அவர்­க­ளைக் கத்தி முனை­யில் அச்­சு­றுத்தி இருத்­தி­யுள்­ள­னர்.

வீடு முழு­வ­தும் சல்­லடை போட்­டுத் தேடி­யுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்த தாலிக் கொடி, காப்பு, சங்­கிலி உள்­பட 17 பவு­ணைக் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர். 20 ஆயி­ரம் ரூபா பணத்­தை­யும் எடுத்­துச் சென்­றுள்­ள­னர்.

இள­வா­லைப் பகு­தி­யில் உள்ள பாட­சா­லை­யில் உப அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­று­ப­வ­ரு­டைய வீட்­டி­லேயே இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது. அவ­ரது மனைவி தெல்­லிப்­பழை பிர­தேச செய­ல­கத்­தில் பணி­யாற்­று­கின்­றார்.

அவர் தலை­யில் தாக்­கப்­பட்­ட­மை­யால் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

குற்­றத் தட­வ­ய­வி­யல் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு மோப்ப நாய்­க­ளு­டன் சென்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

You might also like