ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தவராசா முறைப்பாடு!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தவராசா தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளைப் பயன்படுத்தி அல்லது துஸ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும் சட்டம் ஒழுங்கு துறை மீதும், அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் தனது முறைப்பாட்டில் தவராசா குறிப்பிட்டுள்ளார்.

You might also like