ஹிஸ்­புல்லா உரை விவ­ரங்­களை – கோரு­கின்­றது புல­னாய்வு பிரிவு!!

கிழக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் ஹிஸ்­புல்லா நீதி­ப­தியை மாற்­றித் தீர்ப்­பெ­ழுத வைத்­தேன் என்று கூறும் உரை தொடர்­பான மேல­திக விவ­ரங்­களை வழங்கவேண்­டும் என்று வடக்கு மாகாண முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வி­டம் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு கோரிக்கை விடுத்­துள்­ளது.

முன்­னாள் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் மற்­றும் முன்­னாள் ஆளு­நர்­க­ளான ஹிஸ்­புல்லா, அசாத் சாலி ஆகி­யோர் தொடர்­பில் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்ய அமைக்­கப்­பட்ட பொலிஸ் குழு­வி­டம் கடந்த 11ஆம் திகதி வடக்கு மாகாண முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா முறைப்­பாடு ஒன்­றைப் பதிவு செய்­தி­ருந்­தார்.

கிழக்கு மாகா­ணத்­தில் ஓட்­ட­மா­வ­டிப் பகு­தி­யில் உள்ள ஓர் சைவ ஆல­யத்தை முஸ்­லிம் மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு எடுத்­தமை தொடர்­பான விவ­கா­ரம் நீதி­மன்­றுக்கு வழக்­காக சென்­றது. அதை­ய­டுத்து அங்­கி­ருந்த நீதி­ப­தியை மாற்றி எமக்­குச் சார்­பான ஓர் நீதி­பதி மூலம் எழு­தடா தீர்ப்பு என எழு­த­வைத்­தேன் என்று கிழக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் ஹிஸ்­புல்லா ஆற்­றிய உரை ஒளிப்­ப­திவை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்­தார்.

இந்த முறைப்­பாடு தொடர்­பான விசா­ர­ணை­கள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நேற்­று­முன்­தி­னம் முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் பொலிஸ் தல­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். அவ­ரி­டம் கிழக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் உரை­யாற்றி இடம், மாற்­றப்­பட்ட நீதி­ப­தி­க­ளின் பெயர் விவ­ரம் போன்ற விவ­ரங்­கள் இருப்­பின் அவற்­றைச் சமர்ப்­பிக்க வேண்­டும் என்று புல­னாய்­வுப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like