ஒரே ஒரு முறை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?

பகுதி-37

கரு­ணா­நி­தி­யின் மூன்­றா­வது மகன் மு.க.ஸ்ராலின். அவர்­தான் கரு­ணா­நி­தி­யின் முழு அர­சி­யல்­வா­ரி­சாக அவ­தா­ரா­மெ­டுத்­துள்­ளார். கடந்த 50ஆண்­டு­க­ளா­கத் தி.மு.கவின் தலை­வ­ராக இருந்த கரு­ணா­நிதி மறைந்த சூழ­லில், அந்­தக் கட்­சி­யின் இரண்­டா­வது தலை­வ­ராக ஸ்ராலின் பொறுப்­பேற்­றுள்­ளார்.

கரு­ணா­நிதி இறந்­தது முதல் அவ­ரது உடலை மெரி­னா­வில் நல்­ல­டக்­கம் செய்­வ­தற்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது வரை தி.மு.க தொண்­டர்­கள் மற்­றும் மக்­க­ளி­டையே ஒரு பதற்­ற­மான சூழல் நில­வி­யது. இந்­தச் சூழலில் தி.மு.க தொண்­டர்­கள் மற்­றும் மக்­க­ளி­டையே அமை­தியை நிலை ­நாட்­டிக் கரு­ணா­நி­தி­யின் இறு­திச் சடங்கை எவ்­வித பிரச்­சி­னை­யு­மின்றி நடத்­தி­னார் ஸ்ராலின். இது மக்­கள் மத்­தி­யில் அவர் மீதான நம்­பிக்­கையை அதி­க­ரித்­தது.

ஸ்ராலின் எழு­திய உருக்­க­மான கடி­தம்

கரு­ணா­நிதி மறைந்த நாளில் ஸ்ராலின் எழு­திய உருக்­க­மான கடி­தம் இன்று அனைத்­துத் தரப்­பா­லும் பேசப்படு­கி­றது. ‘‘தலை­வரே! என நான் உச்­ச­ரித்­தது தான் என் வாழ்­நா­ளில் அதி­கம். அத­னால் ஒரே ஒரு முறை, இப்­போது ‘அப்பா’ என்று அழைத்­துக் கொள்­ளட்­டுமா தலை­வரே?’’ என்ற அவ­ரது உணர்ச்­சி­யான வார்த்­தை­கள் பல­ரா­லும் சிலா­கித்­துப் பேசப்­ப­டு­கின்­றன.

1976ஆம் ஆண்டு இந்­தி­யா­வில் இந்­தி­ரா­காந்தி கொண்டு வந்த அவ­ச­ர­கா­லச் சட்­ட­மான மிசா சட்­டத்­தின் கீழ் ஸ்ராலின் கைது செய்­யப்­பட்­டுச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். அப்­போது தான் அவ­ருக்கு மக்­கள் மத்­தி­யில் அறி­மு­க­மும், மதிப்­பும் உண்­டா­னது என­லாம்.

செயல் தலை­வ­ரா­னார் ஸ்ராலின்

வயோ­தி­பம் கார­ண­மா­கக் கரு­ணா­நி­தி­யால் இயங்க முடி­யா­மல் போன­போது முதல் முத­லா­கச் செயல் தலை­வர் பதவி உரு­வாக்­கப்­பட்­டது. இதற்கு முன்பு, தி.மு.கவில் செயல் தலை­வர் பதவி இல்­லாத நிலை­யில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் அந்­தக் கட்­சி­யின் முதல் செயல் தலை­வ­ராக மு.க. ஸ்ராலின் தெரிவு செய்­யப்­பட்­டார்.

ஆரம்­பத்­தில் தி.மு.க இளை­ஞ­ர­ணி­யின் அமைப்­பா­ள­ரா­க­வி­ருந்து பின்­னர் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார். சிறிது காலம் தி.மு.கவின் துணைப் பொதுச் செய­லா­ள­ரா­கப் பதவி வகித்த ஸ்ராலின், 2008ஆம் ஆண்­டில் தி.மு.கவின் பொரு­ளா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சென்னை மாந­க­ராட்சி மேய­ராக ஸ்ராலின் இருந்த போது, சென்­னை­யில் பல மேம்­பா­லங்­கள் கட்­டப்­பட்­டன. அதே­வேளை சென்­னை­யில் மேம்­பா­லங்­கள் கட்­டி­ய­தில் ஊழல் செய்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்டு தி.மு.க. தலை­வர் கரு­ணா­நிதி, ஸ்ராலின் உட்­ப­டப் பலர் கைது செய்­யப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

1984ஆம் ஆண்­டில், முதல்­மு­றை­ யாக ஆயி­ரம் விளக்கு சட்­ட­மன்ற தொகு­தி­யில் கள­மி­றங்­கிய ஸ்ராலின் தோல்­வி­ய­டைந்­தார். ஆனால் பின்­னர், 1989, 1996, 2001 மற்­றும் 2006 ஆகிய ஆண்­டு­க­ளில் ஆயி­ரம் விளக்­கு தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார்.

துணை முதல்­வர்
பத­வி­யை­யும் வகித்­தார்

கட்­சி­யின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக, பொரு­ளா­ள­ராக, துணைப் பொதுச் செய­லா­ள­ராக, செயல் தலை­வ­ராக எனப் பல நிலை­க­ளி­லும் ஸ்ராலின் தி.மு.கவில் செயல்­பட்­டி­ருக்­கி­றார். கடந்த 2009ஆம் ஆண்டு, தமி­ழக வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யா­கத் துணை முதல்­வர் பத­வி­யை­யும் ஸ்ராலின் வகித்­தார். தற்­போது தமி­ழக சட்­ட­மன்ற எதிர்க் கட்­சித் தலை­வ­ரா­க­வும் செய­லாற்றி வரு­கி­றார்.

ஜெய­ல­லிதா கால­மான சூழ­லில், அ.தி.முக­வில் பெரி­ய­ள­வில் சல­ச­லப்பு, பிளவு ஏற்­பட்­டது. இந்­தச் சூழ­லில் கரு­ணா­நி­திக்­குப் பிறகு தி.மு.கவில் என்ன நடக்­கும் என்­பதை மிக உன்­னிப்­பாக உல­கமே கூர்ந்து கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஸ்ராலி­னுக்­கான சவால்

கரு­ணா­நி­திக்­குப் பின்­னர் தி.மு.கவின் தலை­மையை ஏற்­றி­ருக்­கின்ற ஸ்ராலி­னுக்கு முன்­னால் உள்ள பெரிய சவால் கரு­ணா­நி­தி­யின் எழுத்து மற்­றும் பேச்­சாற்­றல் ஆகும். இந்­தி­ய­ள­வில் பேச்சு மற்­றும் எழுத்து ஆகி­ய­வற்­றுக்கு உதா­ர­ண­மா­கத் திகழ்ந்த கரு­ணா­நி­தி­யு­டன் ஸ்ராலின் ஒப்­பி­டப்­ப­டு­வார் என்­பது தான் அவ­ருக்கு முன்­னால் உள்ள மிகப்­பெ­ரிய சவா­லா­கும்.

கரு­ணா­நி­தி­யின் மறை­வுக்­குப்­பின், ஸ்ராலின் விரும்­பி­னா­லும், விரும்­பா­ விட்­டா­லும், அவர் மீதான எதிர்­பார்ப்பு தி.மு.கவில் மட்­டு­மல்ல அர­சி­யல் களத்­தி­லும் இனி­வ­ரும் காலங்­க­ளில் கூடு­த­லா­ கவே இருக்­கும்.

‘‘என் உயி­ரி­னும் மேலான அன்பு உடன் பிறப்­பு­களே’’ என்­பது கரு­ணா­நி­தி­யின் பேச்­சுக்­க­ளின் தொடக்­கம். அதையே தனது முத­லா­கக் கொண்டு ஸ்ராலின் தனது முத­லா­வது உரையை ஆரம்­பித்­தார். ‘‘என் உயி­ரி­னும் மேலான கலை­ஞ­ரின் அன்பு உடன் பிறப்­பு­களே’’ என்று கூறி ஸ்ராலின் தனது உரையை ஆரம்­பித்­தார்.

திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ரா­கத் தெரி­வான ஸ்ராலின், தனது முதல் உரை­யில் மாநில சுயாட்சி, மதச் சார்­பின்மை ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்­திப் பேசி­னார்.

‘‘முது­கெ­லும்­பில்­லாத அரசு’’ எனத் தமி­ழக அர­சைக் கண்­டித்­தார். அத்­தோடு, ‘‘இந்­தி­யா­வுக்­குக் காவி பூசு­ப­வர்­களை எதிர்ப்­பேன்’’ என மத்­திய அர­சை­யும், கண்­டித்­தார். அதே­வேளை அண்ணா, கரு­ணா­நிதி ஆகி­யோ­ரின் பாதை­யில் செல்­லப்­போ­வ­தா­க­வும் சூழு­ரைத்­தார்.

– தொடரும்

You might also like