side Add

19ஆவது திருத்­தமே- சிக்கலுக்­குக் கார­ணம் கோத்­த­பா­ய­!!

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் சிக்­கல் நிலைக்கு அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்­தைக் கொண்டு வந்­த­வர்­களே பொறுப்­புக்­கூற வேண்­டும். அர­ச­மைப்­புத் தொடர்­பில் இது­வரை கால­மும் இத்­த­கை­ய­தொரு குழப்­ப­நிலை ஏற்­பட்­ட­தில்லை.

தற்­போது இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சினை ஏற்­ப­டு­கின்­ற­தெ­னின் அதற்கு முறை­யான உள்­ள­டக்­கங்­கள் அற்ற அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தமே கார­ண­மா­கும். இவ்­வாறு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச, மகிந்த அர­சின் ஆட்­சிக் காலத்­தில், அவ­ரது தந்தை டீ.ஏ.ராஜ­பக்ச நினை­வுத் தூபி மற்­றும் நூத­ன­சாலை அமைப்­ப­தற்கு 90 மில்­லி­யன் ரூபா நிதியை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தி­னார் எனத் தெரி­வித்து வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரான வழக்கு, கொழும்பு சிறப்பு மேல் நீதி­மன்­றத்­தில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. ஜன­வரி 22ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர் விசா­ர­ணைக்கு வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

வழக்கு முடிந்து வெளி­யே­வந்த கோத்­த­பாய ராஜ­பக்ச ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­த­தா­வது,

எமது நாட்­டின் அர­ச­மைப்­பில் நாம் பல வரு­ட­கா­லம் வாழ்ந்­துள்­ளோம். நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­ச­மைப்­புச் சிக்­கல் நிலை போன்ற இக்­கட்­டான சூழ்­நி­லை­கள் இதற்கு முன்­னொ­ரு­போ­தும் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. நாட்­டின் தற்­போ­தைய நிலைக்கு அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­த­தைக் கொண்டு வந்­த­வர்­களே பொறுப்­புக்­கூற வேண்­டும்.

முறை­யான உள்­ள­டக்­கங்­கள் இல்­லா­மல் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­த­தா­லேயே இவ்­வ­ளவு குழப்­பங்­க­ளும் ஏற்­பட்­டுள்­ளன – என்­றார்.

அரச தலை­வர் பத­விக்கு ஒரு­வர் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் போட்­டி­யிட முடி­யாது என்­றும், இரட்­டைக் குடி­யு­ரிமை உள்­ள­வர்­கள் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­றும் 19ஆவது திருத்­தச் சட்­டத்­தில் கூறப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருத்­தங்­க­ளால், மகிந்த ராஜ­பக்ச மற்­றும் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தில் சிக்­கல் நிலமை காணப்­ப­டு­கின்­றது.

You might also like