2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

கிளி­நொச்சி பரந்­தன் பகு­தி­யில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு கிளி­நொச்­சிப்பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார். 2.40 கிலோ­கி­ராம் கேர­ளக் கஞ்­சாவை உட­மை­யில் வைத்­தி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கிழக்­குக் கடற்­படை கட்­ட­ளை­யின் கடற்­ப­டை­யி­னர்­கள் மற்­றும் முல்­லைத்­தீவு பொலிஸ் சிறப்பு படை­யின் அதி­கா­ரி­கள் இணைந்து அவ­ரைக் கைது செய்­த­னர் என்று கடற்­படை தெரி­வித்­துள்­ளது.

கிளி­நொச்சி, பரந்­தன் சந்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் மேற்­கொன்­டுள்ள சோதனை நட­வ­டிக்­கை­யின்­போதே அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சந்­தே­க­ந­பர் வாய்க்­கால் தர்­ம­பு­ரம் பகு­தி­யில் வசிக்­கும் 35 வய­தா­ன­வ­ராக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார்.

சந்­தே­க­ந­பர் கிளி­நொச்சி பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார். கேரள கஞ்சா பொதி மேல­தி­கச் சட்ட நட­வ­டிக்­கை­ளுக்­காக முல்­லைத்­தீவு பொலிஸ் சிறப்பு படை­யின் அதி­கா­ரி­க­ளால் கிளி­நொச்சி பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like