side Add

2019 ஜனவரியில் ட்ரம்ப் –கிம் சந்திப்பர்!!

2019ஆம் ஆண்­டின் ஆரம்­பத்­தில் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் மற்­றும் வட கொரிய அதி­பர் கிம் ஜோங் உன் சந்­திப்பு நடை­பெ­றும் என நம்­பு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் அய­லு­றவு அமைச்­சர் மைக் பாம்­பியோ தெரி­வித்­தார். வட­கொ­ரி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் நிரந்­தர பகை நாடு­க­ளாக உள்­ளன.

சீனா மற்­றும் தென்­கொ­ரியா நாடு­கள் மேற்­கொண்ட முயற்­சி­கள் கார­ண­மாக இரண்டு நாடு­க­ளும் சமா­தா­னம் செய்­வ­தற்கு முன்­வந்­தன.

ட்ரம்ப் – கிம் சந்­திப்பு சிங்­கப்­பூ­ரில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி நடந்­தது. அதன்­போது, தங்­கள் நாட்­டில் உள்ள அணு ஆயுத சோத­னைக் கூடங்­களை அழித்து விடு­வோம். இனி அணு ஆயுத சோத­னை­களை மேற்­கொள்ள மாட்­டோம் என்று வட­கொ­ரியா அறி­வித்­தது. அதே­போல், அமெ­ரிக்­கா­வும் வட­கொ­ரியா மீது விதித்த பொரு­ளா­தார தடை­களை நீக்­கு­வ­தாக அறி­வித்­தது.

இந்த நிலை­யில்­தான் அடுத்த ஆண்டு ஆரம்­பத்­தில் அதி­பர் ட்ரம்ப் மற்­றும் கிம் ஜோங் உன் சந்­திப்பு நடை­பெ­றும் என்று மைக் பாம்­பியோ தெரி­வித்­துள்­ளார்.

இந்­தச் சந்­திப்­பில் இரண்டு நாடு­க­ளும் மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­ப­டும் என அவர் தெரி­வித்­தார்.

You might also like