VPN செயலி ஊடாக போலியான தகவல்கள் பரப்பிய மூவர் கைது!!

இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறப்படுகிறது என்று பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN செயலியைப் பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் தகவலைப் பரப்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடுன் VPN பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like