அடுத்த கட்டம் என்ன ?

தமிழர்­க­ளின் வாக்­கு­க­ளால் ஆட்­சி பீட­மே­றிய ‘நல்­லாட்சி’ அர­சின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது கொள்கை விளக்க உரை­யில் தமி­ழர்­க­ளின் தலை­யில் மிள­காய் அரைத்து விட்­டுப் போயி­ருக்­கின்­றார். சிறி­ லங்­காத் தீவு சுதந்­தி­ர­ம­டைந்­தது முதல் சந்­தித்து வரும் இனப் பிரச்­சி­னைக்கு, தீர்வு காண்­ப­தற்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­காத – தொட்­டும் பார்க்­காத அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை, முழுக்க முழுக்கச் சிங்­கள தேசத்­தின் நலன்­சார்ந்து, பொரு­ளா­தார சிக்­கல்­க­ளுக்கு விடை தேடும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது.

நீண்ட – நெடிய போராட்­டத்­தால் பல லட்­சம் உயிர்­க­ளைப் பறி­கொ­டுத்து, இன்­ன­மும் சுதந்­தி­ரக் காற்­றைச் சுவா­சிக்க முடி­யா­மல் இந்­தத் தீவில் தவித்­துக் கொண்­டி­ருக்­கும் தமி­ழர்­கள், ஜன­நா­யக வழி­யில் தீர்வு கிடைக்­கும் என்று நம்­பியே, ‘நல்­லாட்­சி’­யின் கதா­நா­ய­க­னுக்கு 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி வாக்­க­ளித்­தி­ருந்­தார்­கள். ஆமையை விட மெது­வான வேகத்­தில் அர­சி­யல் தீர்­வுக்­கான சில கரு­மங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மலை­போன்று உயர்ந்த தடை­கள் ஒவ்­வொன்­றை­யும் தட்­டுத் தடு­மாறி கடந்து வந்­தது அரசியல் தீர்வு முயற்சி.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் இந்­தக் கரு­மங்­கள், காணா­மற் போனோர் பட்­டி­ய­லில் சேர்ந்து கொண்­டது. அதனை மீள ஒப்­பேற்­று­வ­தில் தமி­ழர் தரப்­பான, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கணி­ச­மான அளவு முயற்­சி­களை முன்­னெ­டுத் தாலும், அது நக­ர­வில்லை. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சே­ன­வின் உரை, இந்த முயற்­சி­கள் இனி நக­ரப் போவ­தில்லை என்­ப­தையே கட்­டி­யம் கூறு­கின்­றன.

எஞ்­சிய இரண்டு ஆண்டு காலப் பகு­திக்­குள், தமிழ் மக்­கள் எதிர்­பார்க்­கும், அர­சி­யல் தீர்வோ, ஐ.நா. தீர்­மா­னம் நடை­மு­றைப்­ப­டுத்­தலோ நடக்­காது என்­பது தெளி­வா­கி­விட்­டது. இனித் தமி­ழர்­கள், தமிழ் மக்­க­ளுக்கு தலைமை தாங்­கும் அர­சி­யல் தரப்­புக்­கள் என்ன செய்­யப் போகின்­றன ?

பொரு­ளா­தார நல­னுக்­காக, சிங்­க­ளத் தேசத்­துக் கட்­சி­களை அணி­தி­ரள அரச தலை­வர் அழைக்­கின்ற அதே­வே­ளை­யில் மறு­பு­றம், அந்­தச் சிங்­கள தேசத்­தால் சின்­னா­ பின்­ன­மாக்­கப்­பட்ட நாங்­கள், எங்­கள் பெருந்­து­ய­ரின் அடை­யா­ள­மாக இருக்­கின்ற முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வைக் கூட ஒன்றித்து – ஒரு குடை­யின் கீழ் கடைப் பிடிக்க மறுக்­கின்­றோம். ஆளுக்­கொரு பக்­கம் அணி­யா­கப் பிரிந்து நின்று, சாவ­டைந்த உடல்­கள் மீது நாட்­டி­யம் ஆடு­கின்­றோம்.

இந்த அரசு தமிழ் மக்­கள் நலன்­சார்ந்து, தமிழ் மக்­க­ளின் வேணவாவான அர­சி­யல் தீர்­வைேய நிறை­வேற்­றாத சூழ­லில் நாம் என்ன செய்­யப் போகின்­றோம்? தமி­ழர் தரப்­பி­டம் இருக்­கும் திட்­டம்­தான் என்ன?

கொழும்பு அரசு அர­சி­யல் தீர்வை வழங்­கும் என்று இனி­யும் நம்பி, அவர்­க­ளுக்கு முட்­டுக் கொடுப்­பதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிறுத்­த­வேண்­டும். இந்த அர­சால் எது­வும் ஆகப் போவ­தில்லை என்று வெட்­டை­யாய் தெரிந்த பின்­ன­ரும், அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வது தமி­ழர் விரோதப் போக்கே.

எங்­க­ளுக்­குள் கன்னை பிரிந்து சண்டை பிடித்­துக் கொண்­டி­ருந்­தால் நடக்­கப் போவது எது­வு­மில்லை. பாலபாடத்­தில் படித்த ஒற்­று­மை­யின் அவ­சி­யத்தை உணர்ந்­தா­வது ஓர­ணி­யில் தமி­ழர் தரப்பு திர­ள­வேண்­டி­யது காலத்­தின் அவ­சி­ய­மா­கி­யி­ருக்­கின்­றது. ஒற்­று­மை­யாய், தமி­ழர்­க­ளின் விடி­வுக்­கான அடுத்த தெரிவு என்ன என்­பதை ஆராய வேண்­டும்.

அதை­வி­டுத்து மீண்­டும், இந்த அரசு தீர்வு தரும் என்று கூட்­ட­மைப்பு அரசுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தும், கூட்­ட­மைப்பை விமர்­சித்­துக் கொண்டு மாற்­றுத் திட்­டங்­களை முன்­வைக்­கா­மல் அர­சி­யல் நடத்­து­வ­தும் என்று தமிழ்த் தலை­மை­க­ளின் போக்­குச் செல்­லு­மா­னால், தமி­ழர் களைக் கட­வு­ளால்­ கூட காப்­பாற்ற முடி­யாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close