side Add

அபத்தமான அரசியல் முடிவு

பல்கலைக்­க­ழக மாண­வர்­கள் மற்­றும் சில­ரின் அழுத்­தங்­கள் கார­ண­மாக முள்­ளி­வாய்க்­கா­லின் முதன்­மைச் சுடர் ஏற்­றும் நிகழ்­வில் இருந்து அர­சி­யல்­வா­தி­கள் அகற்­றப்­பட்­டுள்­ள­னர் என்­கின்­றன செய்­தி­கள். நினை­வேந்­தல் ஏற்­பாடு தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை உறுப் பி­னர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய குழு இந்த முடிவை எடுத்­துள்­ளது.

இதற்கு முன்­ன­தாக யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இது தொடர்­பா­கக் குரல் எழுப்­பி­யி­ருந்­த­னர். இதை­ய­டுத்து நடந்த கலந்­து­ரை­யா­டல்­க­ளில் முதன்­மைச் சுட­ரைத் தான் ஏற்­ற­வேண்­டும் என்­கிற நியதி இல்லை என்று முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ் வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது இந்த அறி­வு­றுத்­த­லை­யொட்­டி­ய­தாக ஏற்­பாட்­டுக் குழு­வின் முடி­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் அர­சி­யல்­வா­தி­கள் சுடர் ஏற்­றக்­கூ­டாது, அதற்கு அவர்­க­ளுக்கு அரு­கதை இல்லை என்­பது வெறும் அர­சி­யல் காழ்ப்­பு­ணர்­வுக் குரல். மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கத் தம்­மால் அந்­தச் சுடரை ஏற்­ற­மு­டி­யாத சில அர­சி­யல்­வா­தி­க­ளின் மூளை­யில் உதித்­தி­ருக்­கக்­கூ­டிய இந்­தக் குர­லுக்கு இவ்­வ­ளவு மதிப்­ப­ளித்­தி­ருக்­கத் தேவை­யில்லை.

மாவீ­ரர் தினத்துக்கும் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்துக்கும் நிறை­யவே வித்­தி­யா­சங்­கள் உள்ளன. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இருந்து தனித் தமி­ழீ­ழம் என்­கிற கன­வோடு கள­மாடி வீரச் சாவ­டைந்த மாவீ­ரர்­க­ளின் அர­சி­யல் கொள்­கை­யில் இருந்து ஒரு­படி கீழே இறங்கி வந்து பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத ஒரு­மித்த நாட்­டுக்­குள் கூட்­டாட்­சித் தீர்வை முழு மன­தோடு ஏற்­றுக்­கொண்­டுள்ள இன்­றி­ருக்­கும் எல்லா அர­சி­யல்­வா­தி­க­ளுமே தனி­ நாடு கேட்­டுப் போரா­டி­ய­வர்­க­ளு­காக சுடர் ஏற்­றும் தகு­தியை அடி­யோடு கொண்­டி­ருக்­கா­த­வர்­கள்.

மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் முழு உரி­மை­யும் அந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இருந்­தா­லும் அவர்­க­ளைப் பிர­தி­நித்­து­வப் ப­டுத்­திச் சுடர் ஏற்­று­வது முடி­யா­தது. அப்­ப­டிச் செய்­வது அர­சி­யல் ஏமாற்று வேலை­யும்­கூட. ஆனால் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினம் அத்­த­கை­ய­தல்ல. அது போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் சார்­பில் நடத்­தப்­ப­டும் நிகழ்வு. அதி­லும் அது முழு அர­சி­யல் நிகழ்வு. “நினை­வு­க­ளின் அர­சி­யல்” என்று வகைப்­ப­டுத்­தப்­ப­டும் இந்த அர­சி­யல் நிகழ்­வில் அர­சி­யல்­வா­தி­களை ஓர­மாக நிற்­கக்­கேட்­பது கற்­ப­னைக்­கெட்­டாத அபத்­தம்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் சார்­பில் இருந்து, அவர்­கள் பட்ட அவ­லங்­க­ளின் பின்­ன­ணி­யில் இருந்து, அந்த இழப்­புக்­க­ளை­யும் சாவு­க­ளை­யும் ஏன் சந்­திக்க நேர்ந்­தது என்­கிற அர­சி­ய­லில் இருந்து எதிர்­கால அர­சி­யலை முன்­ன­கர்த்­த­வேண்­டி­யதே முள்­ளி­வாய்க் கால் நிகழ்­வின் முக்­கிய அர­சி­யல் நிகழ்வு. இந்த வர­லாற்­றுக் கட­ மை­யைச் செய்­ய­வேண்­டி­ய­வர்­கள் அர­சி­யல்­வா­தி­களே. அவர்­களே மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கச் சரியோ பிழையோ அர­சி­யல் நகர்­வு­களை முன்­ன­கர்த்­து­கி­றார்­கள்.

அத்­த­கைய அர­சி­யல்­வா­தி­களை முள்­ளி­வாய்க்­கா­லுக்கு வர­வ­ழைத்து அங்­கி­ருந்து அவர்­க­ளின் அர­சி­யல் பாதையை, போக்கை, செல்­நெ­றியை அவர்­க­ளுக்கு மீண்­டும் மீண்­டும் அழுத்தி ஞாப­கப்­ப­டுத்தி அதி­லி­ருந்து அவர்­கள் வழு­கி­வி­டாத அழுத்­தத்­தைக் கொடுக்­க­வேண்­டுமே தவிர, அவர்­களை ஓர­மாக நிற்க வைத்து அவர்­க­ளின் பொறுப்­பு­க­ளில் இருந்து அவர்­களை ஒதுக்கி வைப்­பது இனத்­திற்­கும் இன அர­சி­ய­லுக்­கும் நன்மை பயப்­ப­தாக அமை­யாது.

மீண்­டும் மீண்­டும் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நின்று சுடர் ஏற்­று­வ­தன் மூலம் அர­சி­யல்­வா­தி­கள் தமது வர­லாற்­றுக் கட­மையை மறந்­து­வி­டா­மல் இருப்­ப­தற்கு அவர்­களை உந்­தித் தள்­ளு­வ­தற்­கும் முள்­ளி­வாய்க்­கா­லில் ஆயி­ர­மா­யி­ர­மாய் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­யும் அவர்­க­ளின் சந்­த­தி­யி­ன­ருக்கு நியா­ய­மும் கிடைப்­ப­தைத் தமது அர­சி­யல் உரை­க­ளின் மூலம் வருடா வரு­டம் அவர்­கள் ஞாப­கப்­ப­டுத்­து­வ­தற்­குக் கிடைத்­தி­ருந்த வாய்ப்பை தட்­டிக்­க­ழித்து அவர்­கள் தமிழ் இன அர­சி­யல் பாதை­யில் இருந்து வில­கி­யி­ருப்­பதை அனு­ம­திப்­பது போன்றே தற்­போ­தைய நிகழ்வு ஏற்­பாடு அமைந்­தி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சார்­பில் யாரா­வ­து­தான் சுடர் ஏற்­ற­வேண்­டும் என்­ப­தும் நடை­மு­றைக்கு ஒவ்­வாத ஒரு தெரிவு முறை. இறு­திப் போரின்­போது அகப்­பட்­டி­ருந்து உயிர் தப்பி வந்த சுமார் 3 லட்­சம் மக்­க­ளுக்­கும் அந்த உரிமை இருக்­கி­றது. ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது அந்த உரி­மையை நிலை­நாட்ட முற்­பட்­டால், என்­னை­யும் சுடர் ஏற்­ற­விடு என்று கேட்டு சண்­டை­பி­டிக்க முற்­பட்­டால் ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் எப்­படி அந்த 9 பிர­தி­நி­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பார்­கள். அந்­தத் தெரிவு முறை மிகப் பல­வீ­ன­மா­னது. அது பிரச்­சி­னை­க­ளுக்­கும் குழப்­பங்­க­ளுக்­கும் வழி­வ­குக்­கும். எந்­தக் கார­ணத்­தைக் கூறி இறு­திப் போரில் இருந்து தப்பி வந்த எந்த ஒரு­வ­ரை­யும் ஏற்­பாட்­டுக் குழு­வி­ன­ரால் நிரா­க­ரிக்க முடி­யும்? அர­சி­ய­லில் எப்­போ­தும் நேர்ப்­பட சிந்­திப்­பது முக்­கி­யம்.

You might also like
X