அமெ­ரிக்க- வட­கொ­ரிய அதி­பர்கள் இன்று சிங்கப்பூரில் சந்திப்பு!!

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப், வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் இன்று  சந்­தித்­துப் பேச்சு நடத்­து­கின்­ற­னர்.

பரம எதிரி நாடு­க­ளான அமெ­ரிக்கா, வட­கொ­ரியா இரண்­டுக்­கும் இடை­யில் கடந்த சில வரு­டங்­க­ளாக உச்­சக்­கட்டக் கருத்து மோதல் கள் இருந்து வந்­தன. இரண்டு நாடு­க­ளின் அதி­பர்­க­ளும் ஒரு­வர் மாறி
ஒரு­வ­ராகப் பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

இந்­தப் பின்­ன­ணி­யில் இவர்­கள் இரு­வ­ருக்­கும் இடை­யில் இன்று அமை­திப் பேச்சு நடை­பெ­று­கின்­றமை பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கவ­னத்­தைப் பெற்­றுள்­ளது.

இவர்­கள் இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ரின் சென்­டோசா தீவில் உள்ள கேபெல்லா விடு­தி­யில் இன்று காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்­படி காலை 6.30) சந்­தித்­துப் பேசு­கின்­ற­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close