அமெரிக்க ஜனாதிபதி மீது – பாலியல் குற்றச்சாட்டு!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல், மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற நவநாகரீக உடைகள் நிறுவனத்தில் டிரம்பை சந்தித்துள்ளார்.

“உடை மாற்றும் அறைக்குள் என்னை இழுத்துச் சென்று டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரைத் தள்ளி விட்டு வெளியே ஓடித் தப்பினேன்“ என்று இ ஜீன் கரோல் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.

“இ ஜீன் கரோல் என்ற பெண்ணை, என் வாழ்நாளில் ஒரு முறை கூடச் சந்தித்து கிடையாது“ என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கரோல் எழுதியுள்ள புதிய புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்கச் செய்யவே, இதுபோல் அவர் கூறி இருப்பதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு புகைப்படம், வீடியோ என எந்த ஆதாரமும் இல்லையா? என்றும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like