அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தத்­தில் -மாற்­றம் செய்ய மைத்­தி­ரி­பால முயற்சி!!

நிறை­வேற்று அதி­கா­ரம் குறைக்­கப்ப­டு­தல், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் நிறு­வப்­ப­டு­தல் உள்­ளிட்ட நல்­லாட்­சிக் கோட்­பா­டு­களை நிலை­நி­றுத்த, மைத்­திரி – ரணில் கூட்டு அர­சால் கொண்டு வரப்­பட்ட 19ஆவது திருத்­தச் சட்­டத்­தில், நாட்­டின் தற்­போ­தைய அர­சி­யல் நெருக்­கடி நில­மைக்கு அமை­வாக திருத்­தம் செய்­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­வ­தாக, அவ­ரது  ஊட­கப் பிரிவு நேற்று வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மகிந்த தலை­மை­யி­லான ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்து கட்­டளை ஆக்­கி­யி­ருந்­தது. இதன் பின்­னர் மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வர்­கள் 19ஆவது திருத்­தமே சகல பிரச்­சி­னை­க­ளுக்­கும் கார­ணம் என்று தொடர்ச்­சி­யா­கக் குற்­றம் சுமத்தி வரு­கின்­ற­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அரச தலை­வர் ஊட­கப் பிரிவு மேற்­படி அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.
அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­தன் பின்­னர் அவ­ரது தலை­மை­யில் அய­ராத முயற்­சி­யின் பெறு­பே­றா­கவே, மூன்று தசாப்த கால­மாக நாட்­டில் ஜன­நா­ய­கம் தொடர்­பில் நில­விய சிக்­கல் நிலை­மைக்கு தீர்­வாக அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச்­சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்­தத் திருத்­தச்­சட்­டத்­தின் ஊடா­கவே சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன. ஜன­நா­யக ரீதி­யி­லான நிறு­வ­னக் கட்­ட­மைப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டமை உள்­ளிட்ட சாத­க­மான பெறு­பே­று­களை எமது சமூ­கம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. அவை எமது நாட்­டில் ஜன­நா­ய­கத்தை மதிக்­கும் மக்­கள் பெற்­றுக்­கொண்ட உண்­மை­யான வெற்­றி­யாக அமை­யும் அதே­வேளை, தாய் நாட்­டின் நவீன யுகத்தை நோக்­கிய பய­ண­துக்­கும் இன்­றி­ய­மை­யா­த­தா­கும்.

19ஆவது திருத்­தச்­சட்­டத்­தில் ஏதே­னும் நடை­முறை ரீதி­யி­லான குறை­பா­டு­கள் காணப்­ப­டு­மா­யின் அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச்­சட்­டத்­தின் கருப்­பொ­ருள் மற்­றும் அத­னூ­டாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக ரீதி­யி­லான விட­யங்­க­ளைப் பாது­காத்து, பலப்­ப­டுத்தி அர­சி­யல் ரீதி­யில் பிரச்­சி­னைக்­கு­ரிய விட­யங்­க­ளுக்­கான திருத்­தங்­களை நாடா­ளு­மன்ற நடை­மு­றைக்­க­மைய மேற்­கொள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர்ப்­ப­ணிப்­பு­டன் இருக்­கின்­றார், என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

You might also like