அரசியலிலும் தித்திக்கட்டும் இந்தத் தீபாவளித் திருநாள்

62

 

இன்று தீபா­வளி. துன்­பங்­கள் எல்­லாம் அகன்று நன்­மை­கள் எம்மை வந்­த­டை­வ­தற்­கான நாள். ஆண்டு தோறும் தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டும்­போது தமிழ் மக்­க­ளுக்கு இந்த ஆண்­டா­வது அர­சி­யல் விடிவு கிட்­டி­வி­டாதா என்­கிற எதிர்­பார்ப்­பும் கூடவே வரு­கின்­றது.

நம்­மில் பெரும்­பா­லோ­னோ­ருக்­குத் தெரி­யும் நர­கா­சு­ரன் கதை. நர­கா­சு­ர­னின் உண்­மைப் பெயர் பவு­மன். திரு­மால் வாரக அவ­தா­ரம் எடுத்து பூமி­யைத் துழைத்து அசு­ரர்­களை அழிக்­கச் சென்­ற­போது அவ­ரது தொடு­கை­யால் பூமா­தே­விக்­குப் பிறந்­த­வன் நர­கா­சு­ரன். கட­வுள் அசுர வதத்­தில் இருந்­த­போது கரு­வா­ன­வன் என்­ப­தால் அசுர குணம் அவ­னி­டத்­தில் இயல்­பா­கவே இருந்­தது. நரன் என்­றால் மனி­தன் என்று பொருள். மனி­த­னாக இருந்­தா­லும் அர­சு­ர­னாக இருந்­தான் என்­ப­தால் அவனை நரக அசு­ரன் என்று அழைத்­தார்­கள். அதுவே நர­கா­சு­ரன் ஆகிப்­போ­னது.

கட­வு­ளின் பாதி அவ­தா­ர­மான நர­கா­சு­ரன் தன் பலம் என்ன என்­பதை உணர்ந்­த­போது அசு­ரர்­க­ளுக்கு மட்­டு­மல்ல தேவர்­க­ளுக்­கும் தொல்லை கொடுக்க ஆரம்­பித்­தான். வழக்­கம் போலவே தேவர்­கள் திரு­மா­லி­டம் சென்று அழ ஆரம்­பித்­த­தால் நர­கா­சு­ர­னைக் கொல்­வது என்று திரு­மால் முடி­வெ­டுத்­தார். ஆனால் நர­கா­சு­ரனோ பூமித் தாய்க்­குப் பிறந்­த­வன். அவனை பூமித் தாயைத் தவிர வேறு எவ­ரா­லும் கொல்ல முடி­யாது என்­கிற வரம் பெற்­ற­வன்.

நர­கா­சு­ரனை நேரில் வெல்ல முடி­யாது என்று கண்ட திரு­மால் ஒரு உத்­தி­யைக் கடைப்­பி­டித்­தார். சண்­டைக்­குத் தன் சகி சத்­தி­ய­பா­மா­வு­டன் சென்­றார். நர­கா­சு­ர­னு­ட­னான தீவிர சண்­டைக்கு நடுவே நர­கா­சு­ர­னின் அம்பு ஒன்று திரு­மாலை மெல்­லத் தாக்­கிச் செல்ல, கடு­மை­யாக அடி­பட்­ட­தைப் போன்று மயங்கி வீழ்ந்­தார் அவர். இதைப் பார்த்­துக் கோப­ம­டைந்த சத்­தி­ய­பாமா நர­கா­சு­ர­னு­டன் தொடர்ந்து போரிட்டு அவ­னைக் கொன்­றாள். சத்­தி­ய­பாமா பூமா தேவி­யின் அவ­தா­ரம் என்­ப­தால் அவ­ளால் நர­கா­சு­ர­னைக் கொல்ல முடிந்­தது. சாகும் தரு­வா­யில்­தான் கொன்­ற­வள் தன் தாய் என்­ப­தைத் தெரிந்­து­கொண்­டான் நர­கா­சு­ரன்.

உடனே தான் மறைந்த இந்த நாள் உலக மக்­கள் எல்­லோர் மனங்­க­ளி­லும் நிற்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தன்­னு­டைய பிடி­யி­லி­ருந்து விடு­பட்ட தேவர்­க­ளும் அசு­ரர்­க­ளும் புதிய ஒளி கிடைத்­த­தா­கக் கருதி ஒளி­ம­ய­மா­கக் கொண்­டாட வேண்­டும் என்று வேண்­டிக்­கொண்­டான். அதுவே தீபா­வ­ளி­யா­கக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது என்­கி­றது புரா­ணம்.
வன­வா­சத்தை முடித்­துக் கொண்டு இரா­மன் நாட்­டுக்­குத் திரும்­பிய நாள் இது­வென்­றும் அத­னையே கொண்­டா­டு­கின்­றார்­கள் என்­றும் சிவன் அர்த்­த­நா­ரீ­சு­வ­ர­ராக, சக்­தி­யைத் தன்­னில் பாதி­யாக ஏற்­றுக்­கொண்ட நாளே தீபா­வளி என்­றும் கூடக் கதை­கள் உள்­ளன.

இலங்­கை­யின் அர­சி­யல் களத்­தி­லும் இப்­போது நல்­ல­வர்­க­ளாக, பாதிக் கட­வு­ளர்­க­ளா­கத் தம்மை வெளிக்­காட்டி வந்த சிலர் திடீ­ரென அசு­ரர்­க­ளாக முழு அவ­தா­ரம் எடுத்து நிற்­கி­றார்­கள். போதாக் குறைக்கு மோச­மான அசு­ரர்­க­ளு­டன் சேர்ந்­தும் இருக்­கி­றார்­கள். இந்த வாரத்­திலோ அடுத்த வாரத்­திலோ அவர்­க­ளுக்­கும் மக்­க­ளாட்­சி­யைப் பாது­காக்­கப்­போ­கி­றோம் என்­கிற தேவர்­க­ளுக்­கும் இடை­யி­லான போராட்­டம் ஒன்று இருக்­கி­றது. தீபா­வ­ளி­யில் கட­வு­ளர்­கள் அசு­ரர்­களை அடக்கி வெற்றி பெற்­ற­தைப் போலவே இங்­கும் நடக்­குமா என்­கிற எதிர்­பார்ப்­போடு இந்­தத் தீபா­வ­ளியை எதிர்க்­கொண்­டுள்­ளார்­கள் தமிழ் மக்­கள்.

நல்­லதே நடக்­கட்­டும்! இனிய தீபா­வளி நல்வாழ்த்­துக்­கள்!

You might also like