side Add

அரசியல் வரலாற்றில்- மோசமான இடத்தில் மைத்திரி!!

தமக்கு ஏற்­பட்ட மன அழுத்­தத்­தைச் சீர் செய்­யும் பொருட்டு அரச தலை­வர் மைத்திரிபால வெளி­நாடு ஒன்­றுக்­குச் சென்­றுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. கடந்தவருட முடிவில் சுமார் 50 நாள்­கள் நீடித்த அர­சி­யல் குழப்­பங்­கள் தற்­கா­லி­க­மா­கத் தணிந்­துள்­ள­னவே தவிர அவற்­றுக்கு நிரந்­த­ர­மான தீர்வு எது­வுமே எட்­டப்­ப­ட­வில்லை. இந்­தக் குழ்­பங்­கள் அனைத்­துக்­கும் அரச தலை­வரே கார­ண­மாக இருந்­துள்­ளார். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வு­ட­னான தனது முரண்­பா­டு­களை மன­தில் வைத்­துக்­கொண்டு அவ­ரைப் பழி­வாங்­கும் நோக்­கு­டன் அவர் மேற்­கொண்ட முயற்­சி­கள் தோல்­வி­யில் முடி­வ­டைந்­த­தால் அரச தலை­வர் மன அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கின்­றது. இந்த விட­யத்­தில் அரச தலை­வர் மட்­டு­மின்றி முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்­ச­வும் தவ­றி­ழைத்­தமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. இந்த இரு­வ­ருமே நாட்­டின் அர­ச­மைப்பை மீறிச் செயற்­பட்­டுள்­ள­னர். நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­ல் நடந்து கொண்­டுள்­ள­னர்.

அரச தலை­வர் நிகழ்த்­திய
இமா­ல­யத் தவ­று­கள்
நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தும் மகிந்த ராஜ­பக்­சவைத் தலைமை அமைச்­சர் பொறுப்­பில் அமர்த்­தி­ய­தும் அரச தலை­வர் புரிந்த இமா­ல­யத் தவ­று­க­ளா­கும். இறு­தி­யில் உயர் நீதி­மன்­றம் இந்த விட­யத்­தில் தலை­யிட வேண்டி நேரிட்­டது. அரச தலை­வ­ரின் ஆணை­கள் செல்­லு­ப­டி­யற்­ற­வையாக்­கப்­பட்­டன. அத்­து­டன் பெருத்த அவ­மா­னத்­து­டன் மகிந்த ராஜ­பக்ச பத­வி­யி­லி­ருந்து வில­கிச் சென்­றார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமது பத­வி­யில் தொடர்ந்­தார். இவை அரச தலை­வ­ருக்கு நாட்டு மக்­க­ளி­டையே அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­விட்­டன. அயல் நாடு­க­ளின் கணிப்­பில் நாட்­டின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்தி விட்­டது. சில நாடு­கள் பொரு­ளா­தா­ரத் தடையை விதிப்­பது தொடர்­பா­கச் சிந்­திக்­கு­ம­ள­வுக்கு நிலைமை மோச­மான கட்­டத்தை எட்­டி­யது.

மைத்­தி­ரி­பா­ல­வின்
அர­சி­யல் நுழைவு
அரச தலை­வர் மைத்­தி­பால சிறி­சேன தமது சொந்­தச் செல்­வாக்­கைப் பயன்­ப­டுத்­திப் பத­விக்கு வந்த ஒரு­வ­ரல்ல. பல தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து கிடைத்த ஆத­ர­வின் கார­ண­மா­கவே அரச தலை­வர் பத­வி­யில் அவ­ரால் அமர முடிந்­தது. ஆனால் அவர் இவற்­றை­யெல்­லாம் சிந்­திப்­ப­வ­ ரா­கத் தெரி­ய­வில்லை. தனது மன­தில் தோன்­று ­வதை நடை­மு­றைப்­ப­டுத்­தும் ஒரு­வ­ரா­கவே அவர் காணப்­ப­டு­கின்­றார். இலங்­கை­யில் நீதித்­துறை நேர்­மை­யு­டன் செயற்­பட்­டி­ருக்­காது விட்­டால் அவர் ஏற்­ப­டுத்­திய குழப்­பங்­கள் நீடிக்­கவே செய்­தி­ருக்­கும். அரச தலை­வர் என்­கிற உயர் பீடத்­தில் நிலைத்­தி­ ருப்­ப­வர் செய்த பொ றுப்­பற்ற செயல் நீதி­மன்­றத்தை நாடு­ம­ள­வுக்கு இருந்­துள்­ளது. உயர் தரப்­பி­னர் இவ்­வாறு செய்­ப­டு­வார்­க­ளா­னால், அர­சும், அரச தலை­வ­ரும் நாட்­டுக்­குத் தேவை­யற்ற நிலை வந்­து­வி­டும். அரச தலை­வர் தவ­றா­கச் செயற்­பட்­ட­தன் கார­ண­மா­கவே உயர் நீதி­மன்­றம் தலை­யிட்டு நீதியை நிலை­நாட்­ட ­வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

இலங்­கை­யின் நீதித்­துறை
இன­ரீ­தி­யான சிந்­த­னைக்­குட்­பட்­டது
இலங்­கை­யின் நீதித்­துறை இன­ரீ­தி­யான சிந்­த­னைக்கு உட்­பட்­ட­தேன உயர்­நீ­தி­மன்ற முன்­னாள் நீதி­ய­ர­ச­ரும், வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தமை இந்த இடத்­தில் கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பில் பேசும்­போதே அவர் இவ்­வாறு கூறி­யி­ருக்­கி­றார். ஆனால் பன்­னாட்டு நீதித்­து­றை­யி­னர் போர்க் குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வதைத் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் எவ­ல­ருமே ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரி­ய­வும் இதில் அடங்­கு­கின்­றார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர்
பத­விக்­கான சர்ச்சை
தலைமை அமைச்­சர் தொடர்­பான குழப்­பங்­க­ளுக்­குத் தற்­போது முற்­றுப்­புள்ளி இடப்­பட்ட போதி­லும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி தொடர்­பில் சர்ச்­சை­கள் நீடிக்­கவே செய்­கின்­றன. தமி­ழர் ஒரு­வர் அந்­தப் பத­வி­யில் நீடிப்­ப­தைத் தென்­ப­குதி அர­சி­யல்வாதி­கள் ஏற்­றுக்கொள்­ளா­மையே இதற்கு முதன்­மைக் கார­ண­மா­கும். மகிந்த அணியை அரச தலை­வர் கட்­டுப்­ப­டுத்­து­வ­தன் மூல­மாக எந்­த­வொரு சர்ச்­சைக்­கும் முடி­வு­கட்ட முடி­யும். ஆனால் அவ்­வாறு செய்­வ­தற்­குத் அவ­ருக்­குத் துணி­வுள்­ள­ தா­கத் தெரி­ய­வில்லை. அரச தலை­வர் தமது மன அழுத்­தத்தை மட்­டுமே கவ­னத்­தில் கொண்டு செயற்­ப­டா­மல் நாட்டு மக்­க­ளை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தமது பத­விக்­கா­லம் முடி­வ­டை­ வ­தற்­குள் அவர் நல்லமுறை யில் செயற்­ப­டா­விட்­டால் எதிர்­கா­லத்­தில் இந்த நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றில் மோச­மான பக்­கங்­க­ளை நிரப்பிய அரசியல் தலைவராகவே அவர் பேசப்படுகிறார்.

You might also like