ஆட்­சி­யைக் கைப்­பற்ற மைத்­திரி மீள முயற்சி!

எதிர்­வ­ரும் நவம்­பர் –- டிசெம்­பர் மாதக் காலப்­ப­கு­திக்­குள் நடை­பெ­ற­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கத் தற்­போ­துள்ள அர­சைக் கவிழ்க்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­னொரு முயற்­சியை மேற்­கொள்­ள­வுள்­ளார் என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தற்­போது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஒரு தொகுதி உறுப்­பி­னர்­க­ளை­யும் இணைத்­துக் கொண்டு 113 உறுப்­பி­னர்­க­ளு­டன் பெரும்­பான்­மைப் பலத்­து­டன் ஆட்சி அமைக்­கும் திட்­டம் ஒன்று வகுக்­கப்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தத் திட்­டத்­துக்கு ஆறு­மு­கம் தொண்­ட­மான் தலை­மை­யி­லான இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் இரு உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை முஸ்­லிம் காங்­கி­ரஸ், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள் ஆத­ர­வ­ளிப்­பார்­கள் என்று அரச தலை­வர் நம்­பு­கின்­றார் என்­றும் தெரி­கின்­றது.

அண்­மைக்­கா­ல­மாக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் சிலரை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராட்டி வரு­கின்­றார். அது இந்த ஆட்­சி­ய­மைக்­கும் திட்­டத்­தின் ஒரு­ப­குதி என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தத் தக­வல்­க­ளைக் கொழும்பு ஆங்­கில ஊட­கம் ஒன்று வெளி­யிட்­டுள்­ளது.

You might also like