இணைந்தே அஞ்­ச­லிப்­போம்!!

தமி­ழர் தாய­கம் குரு­திச் சக­தி­யில் தோய்ந்த நாள்­க­ளின் நினை­வ­லை­கள் மீண்­டும் மனதை கனக்க வைக்­கின்­றன. தமி­ழர் தாய­கத்தை வலி­யு­றுத்தி ஆயு­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வந்த விடு­த­லைப் புலி­கள் இற்­றைக்கு 9 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மௌனிக்­கச் செய்­யப்­ப­ட்டார்­கள்.

ஆயு­தப் போராட்­டம் மௌனிக்­கச் செய்­யப்­பட்­ட­போது தமது உயி­ரைப் பறி­கொ­டுத்த உற­வு­க­ளின் 9ஆவது ஆண்டு நினைவு நாள் முள்­ளி­வாய்க்­கால் முற்­றத்­தில் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை உள்­ளிட்ட விட­யங்­க­ளைப் போன்று முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக் கும் அர­சி­யல் சாயம் பூசுவு­தற்கு சிலர் முனைப்­புக் காட்­டவே செய்­த­னர், செய்­கின்­ற­னர்.

ஆனால், எந்­த­வி­த­மான அர­சி­யல் கலப்­பும் இல்­லா­மல் இணைந்தே அஞ்­ச­லிப் பது என்­ப­தில் சில அமைப்­புக்­கள் அழுத்­தம் திருத்­த­மாக உள்­ளன. அதுவே சரி­யா­ன­தும் காலத்­தின் தேவை­யும்­கூட.

அந்த வகை­யில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந் தலை இம்­முறை கடைப்­பி­டிக்க பெரும் கரி­சனை காட்­டி­வ­ரு­கி­றது. அதன் ஆர்­வ­மும், தன்­னெ­ழுச்­சி­யும், சிந்­த­னை­யும், செயல் வடி­வ­மும் பாராட்­டப்­பட வேண்­டிவை. நினை­வு­நாள் கடைப்­பி­டிப்­பா­னது எவ்­வித அர­சி­யல் கலப்­பும் அற்­ற­தாக நடை­பெற்று முடி­வு­று­வ­தற்கு பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் சிறந்த தெரி­வு­தான்.

நினை­வு­நா­ளுக்கு உரிய முக்­கி­யத்­து­வத்­தைக் கொடுத்து, அதைக் கொண்­டு­ந­டத்­தக் கூடிய தகுதி, கனதி என்­ப­ன­வும் அந்த ஒன்­றி­யத்­துக்கு உண்டு என்­றால் அது மிகை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை. கடந்த கால வர­லா­று­க­ளும், பதி­வு­க­ளும்­கூட அதை­யே­தான் தெரி­விக்­கின்­றன. ஆக, அர­சி­யல் கட்­சி­கள் இது விட­யத்­தில் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­துக்கு வழி­விட்டு ஒதுங்­கு­தல் சாலச் சிறந்­தது. சரி­யா­னது. தமி­ழர்­தா­யக மக்­க­ளின் விருப்­ப­மும் அதுவே.

அதே­போன்று, முள்ளி வாய்க்­கா­லில் அர­சி­ய­லுக்கு இட­மில்லை என்ற கூற்றை அழுத்­தம் திருத்­த­மாக வைத்­துள்­ளது யாழ்ப்­பாண மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­குழு. ‘முள்­ளி­வாய்க்­கா­லில் அர­சி­யல் செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

தமது சுய­லாப அர­சி­ய­லுக்­காக கட்­சி­களை, கட்­சி­கள் விமர்­சிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. அர­சி­யல் தலை­வர்­கள் வெறும் 2 நிமி­டங்­கள் மட்­டுமே உரை­யாற்­ற­லாம்’ என்­ற­வா­றாக உள்­ளது அதன் நிலைப்­பாடு. அர­சி­யல் கட்­சி­கள் தமக்கு விரும்­பிய பிர­தே­சங்­க­ளில் முள்­ளி­வாய்க்­கால் அஞ்­சலி நிகழ்­வு­களை நடத்­து­வது வேத­னைக்­கு­ரி­யது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளது அது.

எழுந்­த­மானமான இடங்­க­ளில் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை அர­சி­யல் கட்­சி­கள் கடைப்­பி­டிக்­கும் போக்­குக்கு கணி­ச­மான எதிர்ப்­பலை உண்டு என்­பது அவ­தா­னம். இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யி­லேயே இவ்­வா­றான கோரிக்­கை­யை­யும் வைத்­துள்­ளது யாழ்ப்­பாண மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­குழு.

ஆக, இறு­திப்­போ­ரில் கொல்­லப்­பட்­ட­வர்­கள் எமது உற­வு­கள், எமக்­காக வீழ்ந்­த­வர்­கள். இனத்­தால், மொழி­யால், மதத்­தால், நிறத்­தால், எண்­ணத்­தால், சிந்­த­னை­யால் என அனைத்­தா­லும் எம்­ம­வர்­கள். அவர்­கள் தமது இறுதி மூச்சை உதிர்த்த நாள்­களை நாம் கட்­சிக்­கொ­டி­க­ளின் பின்­னால் நின்று கடைப்­பி­டிப்­ப­தென்­பதோ, கங்­க­ணம் கட்­டிக்­கொள்­வது என்­பதோ அபத்­தம். இதை அனை­வ­ரும் உணர்ந்­த­வர்­க­ளாக, அர­சி­யல் பேதம் இல்­லா­த­வர்­களாக மனித நேயத்­தில் அடிப்­ப­டை­யில் ஓரி­டத்­தில் ஒன்­று­கூடி அஞ்­ச­லிப்­போம்.

இந்த வரு­டம் மட்­டு­மல்ல இன்­னும் எத்­தனை தசாப்­தங்­கள் கடந்­தா­லும், சாவில் வாழ்வு காணும் அர­சி­யல் சக்­தி­களை துச்­ச­மென மதித்­துத் தூர­மாக விரட்­டி­ய­டித்து ஓர­ணி­யில் ஒன்று திரண்­ட­வர்­க­ளாக எமது அஞ்­ச­லி­கள் அமை­யட்­டும். அதுவே எமக்­காக மூச்­சி­ழந்­த­வர்­க­ளுக்கு நாம் செய்­யும் துரும்­ப­ளவு பிரதி உப­கா­ர­மாக அமை­யும். செய்­வோ­மாக.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close