இந்­தியா – பாகிஸ்­தான் இன்று மோதல்!!

ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­ப­டும் இந்­தியா – பாகிஸ்­தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தில் மாலை 5 மணிக்கு இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தி­யா­வில் பாகிஸ்­தான் ஆயு­த­தா­ரி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட மும்­பைத் தாக்­கு­த­லுக்­குப் பின்­னர் இந்த இரண்டு அணி­க­ளும் நேருக்­கு­நேர் இரு­த­ரப்­புத் தொடர்­க­ளில் விளை­யா­டு­வ­தில்லை. பன்­னாட்டு கிரிக்­கெட் சபை­யின் பொது­வான அட்­ட­வ­ணை­க­ளி­லேயே அவை விளை­யா­டு­கின்­றன.

இதன்­படி ஆசி­யக் கிண்­ணம், ரி-20 உல­கக்­கிண்­ணம், மினி உல­கக்­கிண்­ணம், உல­கக்­கிண்­ணம் ஆகிய நான்கு தொடர்­க­ளி­லும்­தான் இந்­தியா – பாகிஸ்­தான் அணி­கள் விளை­யாட வாய்ப்­புள்­ளது.

ஆக, இரு அணி­க­ளும் நேருக்­கு­நேர் மோது­வ­தென்­பதே எப்­போ­தா­வது நடை­பெ­றும் விட­யம் என்­றா­கி­விட்ட நிலை­யில் இந்த இரண்டு அணி­க­ளும் இன்று நேருக்­கு­நேர் மோத­வுள்­ளன.

You might also like