இந்தியா – இலங்கை நிலவழி சாத்தியமா?

,இன்னும் 700-–750 ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்­குச் செல்ல கப்­பல் தேவைப்­ப­டாது. நில­மார்க்­க­மா­கவே சென்­று­வி­ட­லாம். ஆம், இரு நாடு­க­ளும் இயற்­கை­யான நிலப் பாலத்­தால் இணைக்­கப்­ப­டும் என்­கின்­றன உலகு சார் நடத்­தப்­பட்ட ஆய்­வு­கள். இன்­றைய கடல் மட்­டத்­தோடு கடந்­த­கால கடல் மட்­டத்தை ஒப்­பி­டும்­போது கிடைக்­கும் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆய்­வா­ளர்­கள் இந்­தக் கருத்தை முன்­வைக்­கி­றார்­கள்.

தெற்­கா­சிய நாடு­க­ளில், இந்­தி­யா­வும் இலங்­கை­யும் மிக அரு­கில் உள்ள இரண்டு நிலப்­ப­கு­தி­கள், நாடு­கள். இந்த நிலப்­ப­கு­தி­கள் இரண்­டும் கடந்­த­கா­லத்­தில் ஒரே நிலப்­ப­கு­தி­யாக இருந்­தன என்­றும், பின்­னர் கடல் கோளி­னால் பிரிக்­கப்­பட்­டன என்­றும் சங்­க­கா­லத் தமிழ் இலக்­கி­யங்­கள் விவ­ரிக்­கின்­றன. இன்­றைய கடல் மட்­டத்­தோடு கடந்­த­கா­லக் கடல் மட்­டத்தை ஒப்­பி­டும்­போது, கடந்த 2 லட்­சம் ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே கடல் மட்­டம் உயர்ந்­தும் தாழ்ந்­தும் வந்­தி­ருக்­கி­றது என்­கின்­றன உலகு சார் நடத்­தப்­பட்ட ஆய்­வு­கள்.

இணைந்­தி­ருந்த இலங்கை
கடந்த 2 லட்­சம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு கடல் மட்­டம், இன்­றைய கடல் மட்­டத்­தை­விட சுமார் 7 மீற்­றர் ஆழத்­தில் இருந்­த­தா­க­வும், 1.4 லட்­சம் ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய கால­கட்­டத்­தில் 130 மீற்­றர் ஆழத்­துக்­குத் தாழ்ந்­த­தா­க­வும், 1.25 லட்­சம் ஆண்­டு­கள் கால­கட்­டத்­தில் கடல் மட்­டம் உயர்ந்து தற்­கால மட்­டத்­துக்கு 5 மீற்­றர் கீழான உய­ரத்தை அடைந்­தது என்­றும் அந்த ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. பின்­னர், கடல் மட்­டம் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கத் தாழ்ந்து சுமார் 20 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய கால­கட்­டத்­தில், இன்­றைய கடல் மட்­டத்­தை­விட 130 மீற்­றர் ஆழத்­தில் இருந்­த­தா­க­வும், கடந்த 20 ஆயி­ரம் ஆண்­டு­கள் முதல் கொஞ்­சம் கொஞ்­ச­மாக கடல் மட்­டம் உயர்ந்து தற்­கால நிலையை அடைந்­தி­ருக்­கி­றது என்­றும் இந்த ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

கடல் மட்­டத்­தில் நிகழ்ந்த இந்த மாறு­தல்­கள் திருச்சி பார­தி­தா­சன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தொலை உணர்­வுத் துறை­யில் கணினி மூலம் காட்­சிப்­ப­டுத்­திப் பார்க்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 2 லட்­சம் ஆண்­டு­கள் முதல் தற்­கா­லம் வரை, கடல் மட்­டம் தாழ்ந்­த­போது இந்­தி­யா­வும் இலங்­கை­யும் இணைந்­தி­ருந்­த­தை­யும், கடல் மட்­டம் உயர்ந்த காலங்­க­ளில் பிரிந்து இரு நிலப்­ப­கு­தி­க­ளாக இருந்­த­தை­யும் உணர முடிந்­தது. சமீ­பத்­தில், பார­தி­தா­சன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடத்­திய ஆய்­வில், இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் இடையே வட­மேற்கே வேதா­ரண்­யத்­தில் இருந்து தென்­கி­ழக்கே இலங்கை யாழ்ப்­பா­ணத்தை நோக்கி நீள­மான நிலப்­ப­குதி உரு­வா­கி­வ­ரு­வது கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது.

பிறை­வ­டிவ மணல்­மே­டு­கள்
செயற்­கைக்­கோள் படம் மற்­றும் கணினி தக­வ­லி­யல் (ஜிஐ­எஸ்) சார் ஆய்­வு­கள் மேலும் பல அரியதக­வல்­களை வெளிக்­கொ­ணர்ந்­தி­ருக்­கின்­றன. வேதா­ரண்­யத்­துக்கு மேற்கே உள்ள பட்­டுக்­கோட்டை – மன்­னார்­குடி பகு­தி­யில் இரண்டு பூமி வெடிப்­பு­கள் உள்­ள­தா­க­வும், இதன் மூலம் பட்­டுக்­கோட்டை -மன்­னார்­குடி பகுதி கொஞ்­சம் கொஞ்­ச­மாக மேலே எழும்­பிக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் தெரி­கி­றது. இத­னால் கிழக்கே உள்ள திருத்­து­றைப்­பூண்டி – வேதா­ரண்­யம் கட­லோ­ரப்­ப­குதி கொஞ்­சம் கொஞ்­ச­மாக மேலே உயர்ந்­தும் தென் கிழக்­காக வளர்ந்­தும்­வ­ரு­கி­றது. இதன் கார­ண­மாக, வட­மேற்கே திருத்­து­றைப்­பூண்­டி­யில் இருந்து தென்­கி­ழக்கே வேதா­ரண்­யம் – கோடி­யக்­கரை வரை சுமார் கடந்த 6 ஆயி­ரம் ஆண்­டு­க­ளில் கடல் 60 கி.மீ. பின்­வாங்­கு­வ­தோடு, நிலப்­ப­குதி மண்­மே­டு­க­ளா­கப் பிறை வடி­வில் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

பட்­டுக்­கோட்டை – மன்­னார்­குடி நிலப்­ப­குதி உய­ரும்­போது, அதைச் சுற்­றிக்­கொண்டு கடற்­கரை ஓர­மாக, மார்ச் மாதம் முதல் ஒக்­டோ­பர் மாதம் வரை வடக்கு நோக்கி ஓடும் கட­லோர நீரோட்­ட­மும், நவம்­பர் முதல் பெப்­ர­வரி வரை தெற்கு நோக்கி ஓடும் நீரோட்­ட­மும் இதற்­குக் கார­ணம் என­லாம். அதா­வது, பட்­டுக்­கோட்டை மன்­னார்­குடி – திருத்­து­றைப்­பூண்டி பகு­தி­யைக் கடக்­கும்­போது நீரோட்­டம் தடுக்­கப்­ப­டு­வ­தால், அந்­தப் பகு­தி­யைச் சுற்­றிப் பிறை வடி­வில் மண­லைக் கொட்­டு­கி­றது நீரோட்­டம். இந்த நிலப்­ப­குதி சுமார் 6 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்து கொஞ்­சம் கொஞ்­ச­மாக உயர, உயர, ஒன்­றன்­பின் ஒன்­றாக முந்­தைய பிறை­ வ­டிவ மண்­மே­டு­களை அடுத்­த­டுத்த மணல் மேடு­கள் சுற்­றிக்­கொண்டு இப்­படி வடி­வம் பெற்­றி­ருக்­கின்­றன.

இதே­போல், திருத்­து­றைப்­பூண்டி முதல் கோடி­யக்­கரை வரை காணப்­ப­டும் மணல் மேடு­களை கார்­பன் வயது கணிப்­புக்கு உட்­ப­டுத்­தி­ய­போது அவை கி.மு. 4 ஆயி­ரத்து 100 ஆண்­டு­க­ளில் கடற்­கரை திருத்­து­றைப்­பூண்டி அருகே இருந்­த­தா­க­வும், நிலம் உய­ரும்­போது கடல் பின்­வாங்கி கி.மு. 3 ஆயி­ரத்து 600 ஆண்­டு­க­ளில் மரங்­கா­நல்­லூரை அவை அடைந்­த­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கி­றது. கி.மு. 1600ஆம் ஆண்­டு­வாக்­கில் கடல் மேலும் பின்­வாங்கி திட்­டக்­கு­டி­யை­யும், கி.பி. 700ஆம் ஆண்­டு­வாக்­கில் வேதா­ரண்­யத்­தை­யும், பின்­னர் கி.பி. 1000ஆம் ஆண்­டு­க­ளில் கோடி­யக்­க­ரை­யை­யும் அடைந்­தி­ருக்­கி­றது.

கி.பி. 2000 ஆண்­டு­க­ளில் எடுத்த செயற்­கைக்­கோள் படங்­கள் கட­லில் கோடி­யக்­க­ரை­யில் இருந்து யாழ்ப்­பா­ணத்தை நோக்கி 20 கி.மீ. வரை மண் குவி­யல்­கள் இருப்­ப­தைக் குறிப்­ப­தால் ஆண்­டுக்கு 20 மீட்­டர் வீதம் நிலப்­ப­குதி கட­லில் கோடி­யக்­க­ரை­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்தை நோக்கி உரு­வாகி உள்­ளது என்று கணிக்க முடி­கி­றது.
இது­போன்று கடந்த 6 ஆயி­ரம் ஆண்­டு­க­ளில், இருந்து இன்­று­வரை ஒவ்­வொரு ஆண்­டுக்­கும் இடையே மாறு­பட்ட அள­வீ­டு­க­ளில் திருத்­து­றைப்­பூண்­டி­யில் இருந்து கோடி­யக்­கரை வரை உரு­வாகி உள்ள நிலப்­ப­கு­தி­கள், பட்­டுக்­கோட்டை மன்­னார்­குடி – திருத்­து­றைப்­பூண்டி பகு­தி­க­ளில் பூமி மேல் எழும்­பு­வ­தில் உள்ள மாறு­பட்ட தன்­மை­க­ளை­யும், இக்­கா­லங்­க­ளில் கடல் நீரோட்­ட த்­தின் மாறு­பட்ட வேகத்­தை­யும் காட்­டு­கின்­றன.

கோடி­யக்­கரை – யாழ்ப்­பா­ணம்
மேலும் கடந்த 6,000 ஆண்­டு­க­ளில் சுமார் 60 கி.மீ. தூரம் திருத்­து­றைப்­பூண்­டி­யில் இருந்து கோடி­யக்­க­ரைக்கு அப்­பால் கட­லில் 20 கி.மீ. வரை யாழ்ப்­பா­ணத்தை நோக்கி வளர்ந்­துள்ள நிலப்­ப­குதி எதிர்­கா­லத்­தில் எவ்­வாறு பரி­ணாம வளர்ச்சி பெறும் என்று கணி­னி­யில் காட்­சிப்­ப­டுத்­தி­ய­போது மிக முக்­கி­ய­மான விஷ­யங்­க­ளைக் கணிக்க முடி­கி­றது.

தற்­போது கோடி­யக்­கரை – யாழ்ப்­பா­ணத்­துக்கு நடுவே பாதி தூரம் (20 கி.மீ.) வரை கட­லில் தென்­ப­டும் மணல் படு­கை­கள் இன்­னும் 500 ஆண்­டு­க­ளில், மேலும் 10 கி.மீ. யாழ்ப்­பா­ணத்தை நோக்கி வளைந்து நெளிந்த நிலப்­ப­கு­தி­யாக வளர்ந்­தி­ருக்­கும். 2600ஆம் ஆண்­டு­வாக்­கில் 40 கி.மீ. தொலை­வுக்­கும், 2750ஆம் ஆண்­டு­வாக்­கில் 50 கி.மீ. தொலை­வுக்­கும் வளர்ந்­தி­ருக்­கும். இதன் மூலம், வளைந்து நெளிந்த நிலப்­ப­கு­தி­யாக யாழ்ப்­பா­ணத்­தோடு இணை­யும்.பட்­டுக்­கோட்டை – மன்­னார்­குடி நிலப்­ப­கு­தி­யின் உயர்வு, கடல் நீரோட்­டத்­தின் வேகம் – சுழற்சி ஆகி­யவை கடந்த 6 ஆயி­ரம் ஆண்­டு­க­ளில் இருந்­து­வ­ரும் இதே­நி­லை­யில் தொடர்ந்­தால், இந்­திய இலங்கை நிலப்­ப­கு­தி­கள் இணை­வது சாத்­தி­யம்­தான்.

அதா­வது, இந்­தி­யா­வும் இலங்­கை­யும் ஒரு இயற்­கை­யான நிலப்­பா­லத்­தால் இன்­னும் 2 ஆயி­ரத்து 750ஆம் ஆண்­டு­வாக்­கில் இணைந்­தி­ருக்­கும். இந்­தப் புதிய நிலப்­பா­லத்­தின் மூலம் உரு­வா­கும் நில­வி­யல் மாற்­றங்­கள், கடல் நீரோட்­டத்­தில் ஏற்­ப­டும் மாற்­றங்­கள், இவை வளை­கு­டா­வில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் ஆகி­யவை விரி­வாக ஆரா­யப்­பட வேண்­டும். அப்­படி ஒரு நிலப்­ப­குதி உரு­வா­கி­யி­ருந்­தால், எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டப்­போ­கும் புவி­யி­யல் மாற்­றம் புதிய திறப்­பு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­த­லாம். இவ்­வ­ளவு ஏன் அதுவே தமி­ழர்­க­ளுக்­குத் தீர்­வு­மா­க­லாம்.

You might also like