இனி­யும் இவர்­களை நம்­ப­லாமா?

2 156

புதிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளில் இருந்து தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மெல்­லப் பின்­வாங்­கி­விட்­டார் என்­பது வெட்ட வெளிச்­ச­மா­கி­யுள்­ளது.

ஒரு கட்­சியை மையப்­ப­டுத்திப் பல­மான ஆட்சி ஒன்று அமைக்­கப்­ப­டு­வ­தன் மூலமே புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­களை முன்­னெ­டுக்க முடி­யும் என்­றும் தெரி­வித்­துள்­ளார் ரணில். அதா­வது நாடா­ளு­மன்­றத்­தில் அறு­திப் பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக்­கொள்­ளாத நிலை­யில் தன்­னால் இனி இந்த முயற்­சி­யைத் தொடர முடி­யாது என்­பதை நாசூக்­கா­கத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் ரணில்.

தமி­ழர்­கள் விட­யத்­தில் இப்­படி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏமாற்­று­வது இது ஒன்­றும் முதற்­ற­ட­வை­யல்ல. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­டன் நடத்­திய பேச்­சுக்­க­ளில் உள்­ளக சுயாட்­சிக் கட்­ட­மைப்­பைத் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு இணக்­கம் தெரி­வித்­து­விட்டு அதி­லி­ருந்து பின்­வாங்­கி­ய­வர்­தான் இந்த ரணில் என்­ப­தைத் தமி­ழர்­கள் மறந்­து­வி­ட­மாட்­டார்­கள். எனவே இப்­போது புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் இருந்து அவர் பின்­வாங்­கி­யி­ருப்­ப­தும் புது­மை­யான ஒன்­றல்ல.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­தும் ஏனைய தமிழ், முஸ்­லிம் கட்­சி­க­ளி­ன­தும் ஆத­ர­வில், தய­வில் ஆட்­சி­யில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­போ­தும் அவற்­றின் முக்­கிய கோரிக்­கை­யான புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது என்­கி­றார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அதற்­கும் மேலா­கச் சென்று, சிறு கட்­சி­க­ளின் தய­வில் ஆட்­சி­யைக் கொண்டு நடத்த முடி­யாது என்­றும் எடுத்­தெ­றிந்து பேசு­கின்­றார்.

சிறு கட்­சி­க­ளின் தய­வில்­தான் ஆட்­சி­யைத் தொட­ர­வேண்­டும் என்று தெரிந்­தே­தான் ஒக்ரோபர் 26 அர­சி­யல் சதி­யைத் தொடர்ந்து நடந்த போராட்­டங்­க­ளின்­போது ஆட்­சிக்கு உரிமை கோரி நின்­றார் ரணில். அதனை அடைந்­த­தும் தன்னை அதி­கா­ரத்­தில் இருத்தி அழகு பார்க்­கும் சிறு கட்­சி­க­ளையே பார­மாக நினைக்­கி­றார். மீண்­டும் ஒரு கட்சி ஆட்சி நடக்க வேண்­டும் என்­பதே அவ­ரது ஆசை.

ஒன்­றரை வருட கால ஆட்­சி­யையே சிறு கட்­சி­க­ளின், அதா­வது தமிழ், முஸ்­லிம் கட்­சி­க­ளின் தய­வில் நடத்த முடி­யாது என்று புலம்­பு­கின்ற ஒரு தலை­வர், ஒட்­டு­மொத்த நாட்­டை­யும் அதே தமிழ், முஸ்­லிம் இனங்­க­ளின் ஆத­ர­வோடு கொண்டு நடத்­து­வ­தற்­குத் தயா­ராக இருப்­பார் என்று எண்­ணு­வது எந்த வகை­யில் நியா­ய­மா­னது?

தங்­க­ளது சொற்­க­ளின் மூல­மும் செயல்­க­ளின் மூல­மும் பௌத்த, சிங்­கள இன­வா­தப் போக்­கையே ரணி­லும் சரி மகிந்­த­வும் சரி வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள். ஒரே வித்­தி­யா­சம் மகிந்த அதனை வெளிப்­ப­டை­யா­க­வும் ரணில் அதனை நாசூக்­கா­க­வும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­ப­து­தான்.
புதிய அர­ச­மைப்­புக்­குப் பதி­லா­கத் தற்­போ­தைய அர­ச­மைப்­புக்கு 20ஆவது திருத்­தத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தி­லேயே ரணில் தரப்பு முனைப்­பாக இருக்­கின்­றது என்­பதை அவ­ரது கருத்து வெளிப்­ப­டுத்­து­கின்­றது. ஆக மொத்­தத்­தில் அடுத்த ஒன்­றரை வருடகால­மும் இந்த விட­யத்­தி­லேயே ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­ன­மும் போட்­டா­போட்­டி­க­ளும் இருக்­கப் போகின்­றன.

இதற்­கி­டை­யில் தமிழ், முஸ்­லிம் மக்­க­ளின் வாக்­கு­கள் தமக்­குக் கிடைக்­கா­மல் போய்­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக, அர­ச­மைப்பு முயற்­சி­யைத் தொடர்­வது போன்ற நாட­கங்­க­ளும் நடக்­கவே செய்­யும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வைக் கூட்­டிப் பேசு­வது என்­கிற வகை­யில் இந்த வேடிக்கை, விநோத நிகழ்வு நடக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

இவை எல்­லாம் தெரிந்­தா­லும் புரிந்­தா­லும் ஆப்­பி­ழுத்த குரங்­கின் நிலை போன்று எது­வும் செய்ய முடி­யாது இவற்­றோடு ஒத்­தோட வேண்­டிய பரி­தாப நிலை­யி­லேயே கூட்­ட­மைப்­பி­னர் இருக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இவர்­க­ளின் இந்­தப் பரி­தாப நிலை­யைத் தமக்­குச் சாத­க­மாக்­கிக்­கொண்டு வாக்கு வேட்­டை­யா­டு­வ­தி­லேயே ஏனைய தலை­வர்­கள் குறி­யாக இருக்­கி­றார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் இவர்­களை இனி­யும் நம்­ப­லாமா என்­ப­தைச் சிந்­திக்­க­வும் புதிய வழியை நாட­வும் வேண்­டிய நிலைக்­குத் தமிழ் மக்­கள் வந்து சேர்ந்­துள்­ளார்­கள். வாக்கு வேட்­டை­யா­டு­வ­தற்­கான அர­சி­ய­லைத் தவிர இந்த ஒன்­றரை வருட காலத்­தில் தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது நன்­மை­கிட்­டும் என்­கிற எதிர்­பார்ப்பு வீணா­கிக்­கொண்டே செல்­கி­றது.

You might also like