இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய பஞ்சாங்கம்
03-06-2018, வைகாசி 20, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் பஞ்சமி திதி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 11.58 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

சிம்மம்

இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

துலாம்

இன்று மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று வீட்டின் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கேற்ற பலன் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேறும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close