இரண்டாவது நாளாகவும் போராட்டம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று இரண்டாம் நாளாகவும் இன்று இடம்பெற்று வருகிறது.

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார்அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

You might also like