இரு தடவைகள் நிலநடுக்கம்- 11 பேர் உயிரிழப்பு!!

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இரண்டு தவைகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலவாது நிலநடுக்கம் நேற்றிரவும், இரண்டாவது நிலநடுக்கம் இன்று காலையும் ஏற்பட்டது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்தன எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 122 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like