இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- மற்றவரின் கை துண்டானது!!

0 327

கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற கூலர் வாகனமும், கெக்கிராவையில் இருந்து மல்லாவி நோக்கிச் சென்ற கதிர்அறுக்கும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்து வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

விபத்தில் யாழ்பாணம் வடமாராட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவரின் கை துண்டானது. மற்றொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like