இரு விபத்­துக்­க­ளில் நால்­வ­ருக்கு காயம்

தென்­ம­ராட்­சி­யில் நேற்று நடந்த இரு வேறு விபத்­துக்­க­ளில் நால்­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­னர். அவர்­க­ளில் 3 பேர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­னர்.

சாவ­கச்­சேரி நுணா­வில் சந்­திக்கு அரு­கில் ஏ-9 வீதி­யில் முச்­சக்­கர வண்­டியை முந்­திச் செல்ல முயன்ற உந்­து­ருளி எதிரே வந்த உந்­து­ரு­ளி­யு­டன் மோதி­யது.

அதில் சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த என்.பிர­தீ­பன் (வயது-–35), உடு­வி­லைச் சேர்ந்த ப.ஜெசிந்­தன் (வயது-–28), சி.அஜந்­தன் (வயது-–21) ஆகி­யோர் காய­ம­டைந்­த­னர்.
மிரு­சு­வில் தொட­ருந்து நிலை­யத்­துக்கு அருகே ஏ-9 வீதி­யில் நடந்த விபத்­தில் ஒரு­வர் காய­ம­டைந்­தார். இரு உந்­து­ரு­ளி­கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்­துள்­ளது. அதில் ச.விம­லன் (வயது-–35) என்­ப­வரே காய­ம­டைந்­தார்.

காய­ம­டைந்­த­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும், விபத்­துக்­கள் தொடர்­பாக பொலி­ஸார் விசா­ர­ணை­ களை மேற்­கொண்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like