side Add

இறு­திப்­போ­ரின் போது பொது­மக்­க­ளின் மீது இர­சா­யன குண்­டு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன

சிறி­த­ரன் வெளிப்­ப­டைப் பேச்சு

விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான இறு­திப்­போ­ரில் பொது­மக்­கள் மீது இலங்கை இரா­ணு­வத்­தால் இர­சா­யன குண்­டு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அவ்­வாறு இர­சா­யன குண்­டு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றால் பன்­னாட்டு விசா­ர­ணை­யில் அதை உறு­திப்­ப­டுத்­தட்­டும் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எஸ்.சிறி­த­ரன்.

நாடா­ளு­மன்­றின் நேற்­றைய அமர்­வில், இர­சா­யன ஆயு­தங்­கள் சம­வாய (திருத்­தச்) சட்­ட­மூ­லம் தொடர்­பான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் தமிழ் பேசும் மக்­கள் 2008-2009 காலப்­ப­கு­தி­யில் போரால் பெரும் அழி­வு­க­ளுக்கு முகம்­கொ­டுத்­த­னர். இதன்­போது பொஸ்­ப­ரஸ், கொத்­துக்­குண்­டு­களை கடு­மை­யாக தமி­ழர்­கள் எதிர்­கொண்­ட­னர் என்­ப­தற்கு பல சாட்­சி­கள் இருக்­கின்­றன. அவ்­வாறு இர­சா­யன குண்­டு­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உடல்­க­ளில் அதன் தாக்­கம் இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

போரின்­போது இர­சா­யன குண்­டு­கள் பாவிக்­கா­விட்­டால் ஏன் அரசு பன்­னாட்டு விசா­ர­ணைக்கு அச்­சப்­பட வேண்­டும்? இர­சா­யன குண்­டு­கள் பாவிக்­கா­விட்­டால் அது­தொ­டர்­பில் தைரி­ய­மாக சாட்­சி­யங்­களை முன்­வைக்­க­லாம். போர்க் குற்­றம் தொடர்­பான விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்­றன என்று அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு தெரி­வித்து வரு­கின்­றது. ஆனால் இது­வரை அந்த விசா­ர­ணை­க­ளின் எந்த அறிக்­கை­யும் வெளிப்­ப­ட­வில்லை.

மேலும் போரின் இறு­திக்­கா­லத்­தில் கொத்­துக் குண்­டு­கள் முள்­ளி­வாய்க்­கால், முல்­லைத்­தீவு பகு­தி­க­ளிலே அதி­க­மாக தமி­ழர்­கள் மீது வீசப்­பட்­டுள்­ளன. அதற்­கான தட­யங்­கள் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளன. அத­னால் அந்த பிர­தே­சத்­தில் பலர் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளாகி இருப்­பது வைத்­திய அறிக்­கை­க­ளின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.
அத்­து­டன் போர் முடி­வ­டைந்து 10 வரு­டங்­கள் ஆகப்­போ­கின்ற நிலை­யில் இன்­னும் தமிழ் மக்­கள் பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு ஆளா­கியே வரு­கின்­ற­னர். தமிழ் இளை­ஞர்­கள் சிறை­க­ளில் அர­சி­யல் கைதி­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளின் விடு­தலை குறித்து இன்­னும் தீர்­மா­னம் இல்­லா­மல் இருக்­கின்­றது. தமி­ழ­ருக்கு நீதி கிடைக்­க­வேண்­டும் என்ற நல்­லெண்­ணம் அர­சில் எவ­ருக்­கும் வர­வில்லை.

மேலும் இந்த மண்­ணில் இர­சா­ய­னக் குண்­டு­கள் பாவிக்­கப்­பட்­டுள்­ளன. அதனை முடி­யு­மா­னால் மறுத்­துக்­காட்­டுங்­கள். போரில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை ஏன் மனி­தா­பி­மான கண்­க­ளில் பார்க்­கக்­கூ­டாது? நாட்­டில் உறு­தி­யாக அரசு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கின்­றது. தமி­ழ­ரின் பிரச்­சி­னைக்கு முறை­யான தீர்­மா­னம் ஒன்றை பெற்­றுத்­த­ரும் என்ற நம்­பிக்­கை­யிலே அர­சின் வரவு செலவு திட்­டத்­துக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றோம். போர்க் குற்­றத்­துக்கு பன்­னாட்டு விசா­ரணை ஒன்று இடம்­பெற்­றால்­தான் முறை­யான தீர்­வொன்று கிடைக்­கும் என்ற நம்­பிக்­கையே எங்­க­ளுக்கு இருக்­கின்­றது – என்­றார்.

You might also like