இல­வ­சக் கல்­வி­யைப் பெற்­ற ­பின்­னர் கல்­வி­மான்­கள், புத்­தி­ஜீ­வி­க­ளின் வெளி­யேற்­றம் பெரும் பிரச்­சினை – அர­ச­ த­லை­வர் கவலை!!

மருத்­து­வம், பொறி­யி­யல், தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­சார்ந்த கல்­வி­மான்­க­ளும் புத்­தி­ஜீ­வி­ க­ளும் நாட்டை விட்­டுச்­செல் வது தற்­போது பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.
இவ்­வாறு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

மேல் மாகா­ணத்­தில் ஆசி­ரி­யர் பரீட்­சை­யில் சித்­தி­ய­ டைந்த 500 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர்  நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வு கொழும்பு தாம­ரைத்­த­டாக கலை­ய­ரங்­கில் நேற்று இடம்­பெற்­றது. அதில் உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சட்­ட­திட்­டங்­களை விதித்து நாட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­குத் தடை ஏற்­ப­டுத்த அரசு தயா­ராக இல்லை எனி­னும், இல­வ­சக் கல்­வியை பெற்ற குடி­மக்­கள் என்ற வகை­யில் மனச்­சாட்­சி­யின்­படி தாய்­நாட்­டுக்­கான தமது கட­மை­களை நிறை­வேற்ற அவர்­கள் அர்ப்­ப­ணிப்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

கல்­வி­மான்­க­ளும் புத்­தி­ஜீ­வி­க­ளும் அதி­க­மாக வாழும் நாடு­களே துரி­த­மாக அபி­வி­ருத்தி அடை­கின்­றன. நாட்­டின் அபி­வி­ருத்தி, பொரு­ளா­தார சுபீட்­சம் ஆகிய இலக்­கு­களை அடைய அவர்­க­ளது பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது.

இல­வச கல்­வியை வழங்­கு­வ­தற்­காக பெருந்­தொகை பணத்தை செல­வி­டு­வ­து­டன், பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரும் நிலை­யில், அந்­தத் துறை­யில் காணப்­ப­டும் உள்­ள­கப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­குத் துரித நட­வ­டிக்­கை­களை எடுக்­க­ வேண்­டும்.

ஆசி­ரி­யர் சேவை­யில் நில­வும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக அரசு, மாகாண சபை­கள் மற்­றும் கல்வி அமைச்சு ஆகி­யன ஒன்­றி­ணைந்த வினைத்­தி­றன்­மிக்க, விரி­வான ஒரு செயற்­றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் சுட்­டிக்­காட்­டி­னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close