side Add

இலங்­கை­யின் அர­சி­யல் நெருக்­கடி முடி­வுக்கு வர வேண்­டும்!!

இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வின் உத்­த­ரவு தற்­போ­தைக்­குச் செல்­லு­ப­டி­யற்­றது என்று அறி­வித்­து­விட்­டது உச்ச நீதி­மன்­றம். அதன் பிறகு கூடிய நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப் பட்­டி­ருக்­கி­றது.

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை உள்­ள­வர்­களே தலைமை அமைச்­ச­ரா­கப் பதவி வகிக்க வேண்­டும் என்ற நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேனா பொருட்­ப­டுத்­தா­மல் தனது அதி­கார வரம்­பு­க­ளைத் தவ­றா­கக் கையாண்­ட­தன் கார­ண­மாக இலங்­கை­யின் அர­சி­யல் சூழல் குழப்­பம் நிறைந்­த­தாக மாறி­யி­ருக்­கி­றது.

அர­சி­யல் நெருக்­க­டி­யைத்
தவிர்த்­தி­ருக்க முடி­யும்
ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைத் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு அந்த இடத்­துக்கு மகிந்த ராஜ­பக்­சவை நிய­மித்­தார் மைத்­தி­ரி­பால சிறி­சேனா. ரணி­லைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கும் அதி­கா­ரம் அரச தலை­வ­ருக்கு உண்டா? என்று பல அர­சி­யல் கட்­சி­கள் கேள்வி கேட்­டதை அடுத்து, நாடா­ளு­மன்­றத்தை முடக்­கு­வ­தற்கு உத்­த­ர­விட்­டார் மைத்­திரி பால சிறி­சேனா.

மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குப் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தற்­காக இப்­ப­டியாகக் கால அவ­கா­சம் அவரால் செய்து கொடுக் கப்­பட்­டது. மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குப் பெரும்­பான்மை இல்லை என்று தெரிந்­த­தும் நாடா­ளு­மன்­றத்­தையே கலைத்­து­வி­டும் தவ­றான முடி­வை­யெ­டுத்­தார். தலைமை அமைச்­ச­ராக மகிந்த ராஜ­பக்ச நீடிக்க முடி­யாது என்­பது உறு­தி­யான பிறகு நாடா­ளு­மன்­றத்­தைச் சந்­தித்­துப் பெரும்­பான்மை வலு இருக்­கி­றதா? என்று ஆராயு­மாறு மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு அரச தலை­வர் கட்­டளை இட்­டி­ருந்­தால் தற்­போ­தைய அர­சி­யல் நெருக்­க­டி­யைத் தவிர்த்­தி­ருக்க முடி­யும்.

ரணில் -– மைத்­திரி கூட்­டணி
மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் சேர்ந்து அமைத்த கூட்­டணி அரசு 2015ஆம் ஆண்­டில் அர­சி­யல் சட்­டத்­துக்­குப் புதிய திருத்­தத்­தைக் கொண்­டு­வந்­தது. அதன்­படி, தெரிவு செய்­யப்­பட்ட நாடா­ளு­மன்­றம் நான்­கரை ஆண்­டு­கள் பத­விக்­கா­லத்­தைப் பூர்த்­தி­செய்­வ­தற்கு முன்­னால் கலைக்­கப்­ப­டக் கூடாது. அப்­ப­டிக் கலைப்­ப­தாக இருந்­தால் நாடா­ளு­மன்­றத்­தின் மூன்­றில் இரண்டு மடங்கு உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னம் கொண்­டு­வரும் பட்சத்தில் கலைக்­க­லாம்.

அதே­ச­ம­யம், நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­ட­வும், திகதி குறிப்­பி­டா­மல் ஒத்­தி­வைக்­க­வும், கலைக்­க­வும் அரச தலை­வ­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றது என்று இலங்கை அர­ச­மைப்­பின் கூறு 33(2)(சி) கூறு­கி­றது. இலங்கை நாடா­ளு­மன்­றத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் இப்­போ­து­தான் மூன்று ஆண்­டு­கள் கடந்­துள்­ளன. நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்க வேண்­டும் என்று எந்­தக் கட்சி உறுப்­பி­னர்­க­ளும் கோர­வில்லை. அர­சி­யல் சட்­டத்தில் இருக் கின்ற சில சீர்­தி­ருத்­தங்­களே காற்­றில் பறக்­க­வி­டப்­ப­டும் நிலை­யில் புதிய, அனைத்­துத் தரப்பு நல­னை­யும் உள்­ள­டக்­கிய அர­சி­யல் சட்­டம் இயற்­றப்­ப­டும் என்ற நம்­பிக்­கை­யைத் தோற்­று­விக்­க­வில்லை.

மைத்­தி­ரி­யின் அர­சி­யல்
கணக்­குப் பிச­கி­விட்­டது
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு நடந்த தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்­ச­வின் கட்­சிக்­குக் கிடைத்த வெற்­றியை அடுத்தே மைத்­தி­ரி­பால சிறி­சேனா போட்ட அர­சி­யல் கணக்­குப் பிச­கா­கி­யி­ருக்­கி­றது. உச்ச நீதி­மன்­றம் தலை­யிட்டு அரச தலை­வ­ரின் அதி­கார வரம்­புக்கு எல்லை வகுத்­தி­ருக்­கி­றது. நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தில் உச்ச நீதி­மன்­றம் அர­சி­யல் சட்­டத்­தின் பாது­கா­வ­ல­ராக இருக்­கி­றது என்­பது உண்­மை­தான். ஆனால், அர­சின் நிர்­வா­கத் தலை­மையை வகிக்­கும் அரச தலை­வ­ரும் நாடா­ளு­மன்­ற­மும் அப்­ப­டி­யொரு சூழலை உரு­வாக்­கு­வது ஜன­நா­யக நெறி­க­ளுக்கு எதி­ரா­னது மட்­டு­மில்லை. அவர்­க­ளைத் தெரிவு செய்த மக்­க­ளுக்­குச் செய்­யும் துரோ­க­மும்­கூட..

You might also like