இலங்கைக் குண்டு வெடிப்பில் உயிரிழந்த – டென்மார்க் சிறுவர்களுக்கு இறுதி அஞ்சலி!!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த டென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சனின் மூன்று பிள்ளைகளின் இறுதி அஞ்சலி நிகழ்வு, டென்மார்கில் நடைபெற்றது.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 3 பிள்ளைகளின் சடலங்கள் ஒன்றாகப் புகைப்பட்டன.

டென்மார்க் நாட்டின் முதல் நிலை கோடீஸ்வரரான ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்னின் இரு மகள்களதும், ஒரு மகனினதும் இறுதி ஆராதனை நிகழ்வும், நல்லடக்கமும் டென்மார்கில் அர்ஹஸ் நகரில் நடைபெற்றது.

மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இறுதி ஆராதனை நிகழ்வில் டென்மார்க்கின் அரச குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

You might also like