இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றம் நடக்­க­வே­யில்லை- மகிந்த!!

இறு­திப் போரின்­போது போர்க் குற்­றம் நடை­பெ­ற­வில்லை என்­பதை போர் வெற்­றி­யின் 10ஆவது ஆண்டு பூர்த்­தி­யில் நான் பகி­ரங்­க­மா­கக் கூற விரும்­பு­கின்­றேன். மேற்­கு­லக நாடு­கள் ஏற்­றுக்­கொள்­ளும் போர்ச்­சட்­டங்­க­ளுக்கு அமைய, இலங்­கை­யில் எந்­த­வொரு போர்க் குற்­ற­மும் இடம்­பெ­ற­வில்லை என்­பதை நான் மீண்­டும் கூறு­கின்­றேன் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜபக்‌ச தெரி­வித்­துள்­ளார்.

விஜே­ரா­ம­வி­லுள்ள தமது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தி­லி­ருந்து எதிர்க்­கட்­சித் தலை­வர் சிறப்பு உரையை நேற்று நிகழ்த்­தி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சில நாடு­கள் போரை நிறுத்­து­மாறு விடுத்த அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் புலிப் பயங்­க­ர­வாத்­துக்கு எதி­ராக முன்­னெ­டுத்த போராட்­டத்தை வெற்­றி­கொண்­டோம். நாம் நேர­டி­யா­கவே நிரா­க­ரித்­த­தன் கார­ண­மா­கவே அது சாத்­தி­ய­மா­னது. அமெ­ரிக்­கா­வின் குடி­ய­ர­சுக் கட்­சி­யால் எமக்கு பல உத­வி­கள் கிடைத்­தன. அதனை கூற வேண்­டும். அமெ­ரிக்கா உத­வி­ய­தன் கார­ண­மா­கவே, 2006ஆம் ஆண்­டில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­னூ­டாக புலி­கள் அமைப்பை பயங்­க­ர­வாத அமைப்­பாக அறி­விக்க முடிந்­தது.

அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­பட்ட உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தக­வ­லின் கார­ண­க­மா­கவே, 2007இல் புலி­கள் அமைப்­பின் ஆயு­தக் கப்­பலை ஆஸ்­தி­ரே­லியா, இந்­தோ­னி­சி­யா­வுக்கு அண்­மித்த கடற்­ப­ரப்­பில் எம்­மால் அழிக்க முடிந்­தது. எனி­னும், 2009 பெப்­ர­வரி மாத்­தி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வில் புதிய அரச தலை­வர் நிய­மிக்­கப்­பட்­டார். அதன்­போது அவர்­க­ளின் எண்­ணக்­கரு மாற்­ற­ம­டைந்­தது.

நாம் பன்­னாட்டு அச்­சு­றுத்­தல்­க­ளைக் கருத்­தில்­கொள்­ளாது போரை முடி­வுக்­குக் கொண்­டு­வந்­தோம். இலங்­கை­யில் போர் முடிந்­த­தன் பின்­னர் இந்­நாட்­டில் அமைதி உரு­வா­தற்கு பன்­னாட்டு மற்­றும் உள்­நாட்டு சக்­தி­கள் இட­ம­ளிக்­க­வில்லை. போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நாளி­லி­ருந்து கடந்த காலத்தை நினை­வூட்டி, எவ்­வ­கை­யி­லே­னும் மோத­லைப் பேணு­வ­தையே அவர்­கள் முன்­னெ­டுத்­த­னர்.

தம்மை செவி­ம­டுக்­காது போரை முடி­வுக்­குக் கொண்­டு­வந்­த­தாக பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­னர். சீனா எமக்கு உத­வு­கின்­றது என்­ப­தும் அவர்­க­ளுக்கு பிரச்­சி­னை­யாக இருந்­தது.

இதே­வேளை தமிழ் மொழி­யில் உரை­யாற்­றிய மகிந்த ராஜ­பக்ச, அன்­பர்­களே! நண்­பர்­களே! வணக்­கம் சலாம் அழைக்­கும் பத்து வரு­டத்­துக்கு முன் இந்த தேசத்­தில் நாம் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­னோம். ஆனால் இன்று அது சிதறி­ உள்­ளது. எனக்­கும் மன­வே­த­னை­யாக உள்­ளது. உங்­க­ளுக்கு என்­மீது வருத்­தம் இருக்­க­லாம். ஆனால் உங்­கள் வாழ்­வில் அரச தலை­வ­ராக நான் செய்த சேவை உங்­க­ளுக்கு எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.

நிம்­ம­தி­யான எமது தாய்­நாட்டை ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்­னால் நாம் பாரம்­கொ­டுத்­தோம். அனைத்து தலை­­­வர்­க­ளும் ஒன்­று­சேர்ந்­து­தான் என்­னி­ட­மி­ருந்து பொறுப்பு எடுத்­தார்­கள். தமிழ்­பே­சும் மக்­க­ளுக்கு சேவை செய்ய என்­னோடு சேராத அவர்­கள் இந்த அர­சுக்கு ஆத­ரவு­ கொடுத்­தார்­கள். இன்­­­றைய அர­சின் செயற்­பா­டு­க­ளுக்கு அவர்­க­ளும் பங்­கா­ளி­கள்­தான். இங்கு வாழும் எல்லா மக்­க­ளும் நிம்­ம­தி­யாக வாழ­வேண்­டும். சந்­தோ­ச­மாக வாழ­வேண்­டும். அந்த நாளை உரு­வாக்க மீண்­டும் நான் பாடு­ப­டு­வேன். இது நிச்­ச­யம். நான் சொல்­வதை செய்­ப­வன். செய்­வதை சொல்­ப­வன், நாளை நமதே வணக்­கம் சலாம் அழைக்­கும் – என்­றார்.

You might also like