இலங்கையில் அர்த்தமற்றுப் போன சொற்கள்

பொது பல சேனா அமைப்­பின் பொதுச் செய­லா­ளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தே­ரர் சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக அவ­ருக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய பொது மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் அவர் நேற்­று­முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்­டார்.

அவர் பொது மன்­னிப்­பின் கீழ் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும் என்று இந்து அமைப்­புக்­கள் உட்­ப­டப் பல தரப்­புக்­க­ளும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. எனி­னும் உயிர்த்த ஞாயிறு தற்­கொ­லைக் குண்­டு­வெ­டிப்­புக்­கள் மற்­றும் படு­கொ­லை­க­ளில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் முஸ்­லிம்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள நிலை­யி­லும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கப் பல இடங்­க­ளி­லும் சிங்­க­ள­வர்­கள் காடைத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­திச் சொத்­துக்­க­ளுக்­கும் உயிர்­க­ளுக்­கும் சேதம் விளை­வித்­தி­ருக்­கும் நிலை­யி­லும் ஞான­சார தேரர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தார் என்­கிற குற்­றத்­தைப் புரிந்­த­மைக்­கா­கவே ஞான­சா­ர­ருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதா­வது நாட்­டின் நீதியை மதிக்­கத் தவ­றி­னார் அவர். இதற்­காக 6 ஆண்­டு­க­ளுக்கு அவ­ருக்­குச் சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லா­மல் காணா­மற்­போன பத்­தி­ரி­கை­யா­ள­ரான பிர­கீத் எக்­னொ­லி­கொ­ட­வின் மனைவி சந்­தி­யாவை மிரட்­டிய குற்­றத்­துக்­காக 6 மாத காலச் சிறைத் தண்­ட­னை­யும் அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டி ­ருந்­தது.

மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­தில் எல்­லா­வற்­றை­யும்­விட அதி­யு­யர்­வாக மதிக்­கப்­ப­டு­வ­தும் மதிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தும் நீதியே! ஞான­சா­ர­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொது மன்­னிப்பு நீதித்­து­றை­யின் சுயா­தீ­னத்­தின் மீது விழுந்­துள்ள அடி, நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் தலை­யிட்­டார், நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தார் என்­ப­தற்­கா­கவே அவ­ருக்­குத் தண்­டனை வழங்­கப்­பட்­டது, இந்த மாதி­ரி­யான குற்­றங்­க­ளுக்கு எந்­த­வொரு நாக­ரி­க­மிக்க சமூ­க­மும் பொது­மன்­னிப்பு வழங்­கு­வது கிடை­யாது என்று தெரி­விக்­கின்­றார் சட்­டத்­த­ர­ணி­யான ஜே.சி.வெலி­ய­முன.
ஞான­சா­ரர் சிங்­கள, பௌத்த தேசி­ய­வாத கடும்­போக்­குக்­குப் பெயர் போன­வர். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நகர்­வு­க­ளுக்­காக அவர் மீது கடும் கண்­ட­னங்­கள் தொடுக்­கப்­பட்­டு­வந்­தன. வெளிப்­ப­டை­யா­கவே அவர் சிங்­கள, பௌத்த இன­வா­தத்­தைக் கக்­கி­னார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர். சிறை­க­ளில் அடைக்­கப்­பட்ட மிகக் குறு­கிய காலத்­தில் அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆனால், தமிழ் அர­சி­யல் கைதி­க­ளைப் பொது மன்­னிப்­பின் கீழ் விடு­விக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கை­கள், போராட்­டங்­கள் எதற்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­வ­ரை­யில் செவி­சாய்க்­க­வில்லை. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் தற்­போது சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கும் அர­சி­யல் கைதி­கள், தமது அர­சி­யல் தலை­மை­கள் இட்ட பணி­க­ளைச் செய்­த­வர்­கள், அல்­லது அத்­த­கைய பணி­க­ளுக்கு உத­வி­ய­வர்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளே­யா­வர். தாம் புரிந்த செயல்­க­ளுக்­கான சூத்­தி­ர­தா­ரி­கள் அவர்­கள் அல்­லர். ஆனால், ஞான­சா­ரர் விட­யத்­தில் எல்­லா­வற்­றுக்­கும் அவரே சூத்­தி­ர­தாரி. இனத்­து­வே­சத்­தைத் தூண்­டி­விட்டு கல­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர் என்று அவர் மீது அச்­சம் இருந்­தது. அவ­ருக்­குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. தமக்கு ஏவப்­பட்ட பணி­யைச் செய்­த­வர்­க­ளுக்­கும் அதற்­குத் துணை நின்­ற­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், 10 ஆண்­டு­கள் கடக்­கும் நிலை­யி­லும், பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு பல தரப்­பட்ட அழுத்­தங்­க­ளைக் கொடுத்த நிலை­யி­லும் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதற்­கான ஒரே கார­ணம் ஞான­சார தேரர் சிங்­க­ள­வர் என்­ப­தும் அர­சி­யல் கைதி­கள் தமி­ழர்­கள் என்­ப­தும் மட்­டுமே!

நல்­லாட்சி, நல்­லி­ணக்­கம், அமைதி என்­ப­ன­வெல்­லாம் இலங்­கை­யில் வாக்கு வேட்­டைக்கு உத­வக்­கூ­டிய அலங்­கா­ரச் சொற்­களே தவிர அர்த்­த­முள்ள சொற்­கள் அல்ல.

You might also like