இலங்கை-இந்தியா மீன்பிடித் தகராறுகள்- இழப்பீடுமற்றும் தீர்வு!!

தொடர்ச்சி….

சிறந்­த­தோர் தீர்வு
இந்த சட்ட விரோத மீன்­பி­டியை, தீவிர மற்­றும் வினைத்­தி­றன் மிக்க சட்ட நடை­மு­றை­யாக்­கல் மூல­மும், அத்­து­டன் அல்­லது இரு­த­ரப்பு (இலங்கை அர­சுக்­கும் இந்­திய அர­சுக்­கு­மி­டை­யில்; அல்­லது, தமிழ்­நாட்டு மற்­றும் இலங்­கை­யின் வட­மா­காண மீனவ சமூ­கத் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தம்) முத்­த­ரப்பு உடன்­ப­டிக்­கை­கள் (இந்­தியா, இலங்கை மற்­றும் தமிழ்­நாடு என்­ப­ன­வற்­றுக்­கி­டை­யில்) அல்­லது நான்­கு­த­ரப்பு (இந்­தியா, வட மாகா­ணம், இலங்கை மற்­றும் தமிழ்­நாடு என்­ப­ன­வற்­றுக் கிடை­யில்) பேச்­சுக்­கள், பல்­வே­று­பட்ட கார­ணங்­க­ளுக்­காக சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அவற்­றுக்கு பல கார­ணங்­கள் மேலே கூறப்­பட்­டுள் ளன. அத்­து­டன் இலங்கை கடற்­ப­டை­யா­னது, இலங்கை கடற்­ப­ரப்­பி­னுள் அத்­து­மீறி நுழை­யும் இந்­திய மீன­ வர்­கள்­மீது துப்­பாக்­கிச் சூடு மேற்­கொள்­வ­தை­யும் நிறுத்­து­வது அவ­சி­ய­மா­னது. இலங்­கை­யின் உள்­நாட்­டுப் போர் காலப்­ப­கு­தி­யின்­போது இலங்­கை­யின் கடற்­ப­ரப்­பி­னுள்; அத்­து­மீறி நுழை­யும் இந்­திய மீன­வர்­கள் மீது துப்­பாக்­கிச் சூடு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

அவற்­றின் போது தமிழ்­நாட்டு மீன­வர்­கள் (உயி­ரி­ழக்­கா­வி­டின்) கடும் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். அது மாத்­தி­ர­மன்றி தமிழ்­நாட்­டின் மீன­வர்­க­ளும் இலங்­கை­யின் வட­ப­குதி மீன­வர்­க­ளும் இலங்­கை­யின் வட­ப­கு­திக் கடல் எல்­லை­யில் மோதிக்­கொண்ட சம்­ப­வங்­க­ளும், அவற்­றின் விளை­வாக இலங்­கைத் தமிழ் மீன­வர்­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வங்­க­ளும் இடம்­பெற்­றுத்­தான் உள்­ளன.

இத்­த­கைய நிலை­மை­க­ளைக் கருத்­திற்­கொண்டு, நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிப் போயி­ருக்­கும் இந்­தப் பிரச்­சி­னைக்கு விஞ்­ஞான மற்­றும் தொழில்­நுட்ப சர்ச்சை தீர்ப்­புப் பொறி­மு­றை­யொன்றை வகுப்­ப­தற்கு உகந்த தரு­ணம் இது­வா­கும். சில­கா­லங்­க­ளுக்கு முன்­னர் இலங்­கைக்­கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான கடல் எல்­லை­யில் மின்­வேலி அமைப்­பது தொடர்­பில் யோசனை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் வாயி­லாக அறி­யக் கிடைக்­கின்­றது. இருப்­பி­னும் அவ்­வாறு மின்­வே­லி­ய­ டைப்­பது அவ­சர நிலை­மை­க­ளுக்­காக இரு­த­ரப்பு எல்­லை­களையும் கடக்க நேரும் இரு­த­ரப்பு மீன­வர்­க­ ளுக்­கும் உயி­ரா­பத்­தினை விளை­ விக்­கக்­கூ­டி­ய­தென்­ப­தால் அந்த யோச­னை­யா­னது நிரா­க­ரிக்­கப்­பட்­டமை விளங்­கிக்­கொள்­ளப்­ப­டக் கூடி­யது.
இந்­திய மத்­திய கடல் மீன்­வள ஆராய்ச்சி நிலை­யத்தின் சென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்­ஞா­னப் பொறுப்­பா­ள­ரும், முன்­னாள் தலைமை விஞ்­ஞா­னி­யு­ மான டாக்­டர் மொஹம்­மட் காசிம், கரை­யோ­ரச் சூழற்­றொ­கு­ தியை மீள­மைக்­கும் முக­மா­க­வும், உயிர்ப் பல்­வ­கை­மையை மேம்­ப­டுத்­த­வும், உயி­ரி­யல் வளங்­களை அதி­க­ரிக்­க­வும் செயற்­கை­யான பாறை­களை உரு­வாக்­கும் திட்­டத்தை முன்­மொ­ழிந்­தார். இதன் மூலம், மீன்­வ­ளம் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தோடு, கரை­யோர மீன்­பி­டிச் சமூ­கத்­தின் வாழ்­வா­தா­ர­மும் மேம்­ப­டும்.

செயற்­கை­யான பாறை­கள் இயற்­கை­யான பவ­ளப் பாறை­க­ளுக்கு பிர­தி­யீ­ டாக அமை­வ­தோடு, அவை இந்­தி­யா­வின் கேரள மாநி­லத்­தின் கரை­யோ­ர­மாக (கோழிக்­கோடு, கண்­ணூர் மற்­றும் திரு­வா­னந்­த­பு­ரம்) மற்­றும் தமிழ்­நாட்­டின் (சென்னை, கட­லூர், மன்­னார் வளை­குடா, கல்­பாக்­கம், நாகப்­பட்­டி­னம், நீல­கிரி, பாக்­கு­வி­ரி­குடா, புலிக்­கோடு மற்­றும் வேறும் பல பகு­தி­க­ளில்) வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கப்­பட்­டு­முள்­ளன.

கட­லின் அடிப்­ப­கு­தி­யல் வாழும் உயி­ரி­னங்­க­ளின் உயிர்ப் பல்­வ­கை­மை­யா­னது, கட­லின் அடிப்­ப­கு­தி­யின் கீழ் அடுக்­கு­களை மேம்­ப­டுத்­து­வ­தன்;; மூலம் அதி­க­ரிக்­கப்­ப­ட­லாம். ஜப்­பான் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த கடல்­சார் உயி­ரி­ய­லா­ளர் ஷின்யா ஒடாக்கே, ஜப்­பா­னின் கட­லில் உரு­வாக்­கப்­பட்ட பவ­ளப்­பா­றை­கள் அதே­ய­ள­வான இயற்­கை­யான பவ­ளப்­பா­றை­க­ளி­லும் 20 மடங்கு அதி­க­மான உயிர்த்­தி­ரளை உரு­வாக்­கு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். லொஸ் ஏஞ்­சல்­ஸி­லுள்ள ஒக்­ஸி­டென்­டல் கல்­லூ­ரி­யால் நடத்­தப்­பட்ட ஆய்­வொ­ன­றில் கடல்­அ­டிப்­ப­ரப்­பின் ஒவ்வொரு சதுர மீற்­ற­ருக்­கு­மான மீனின் நிறை மற்­றும் அதி­லி­ருந்து கிடைக்­கும் எரி­பொ­ருள் என்­பன சாதா­ரண இயற்­கை­யான கற்­பா­றை­கள் கொண்ட பகு­தி­யில் இருந்­தான எண்­ணெய் பிறப்­பாக்­கத்­தி­லும் 20 மடங்கு அதி­க­மா­ன­தா­கக் காணப்­ப­டு­கின்­ற­தென்ற கூற்றை மீள வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

10 அடிக்கு 10 அடிக்கு ஒரு அடி என்ற அள­வு­க­ளில் முப்­ப­ரி­மான பாறை­யின் உரு­வாக்­க­மா­னது, கட­லின் அடிப்­ப­கு­தி­யின் கீழ்ப்­ப­டை­யினை 230 சதுர அடி­யால் அதி­க­ரிப்­ப­தால், அதன் மேற்­ப­ரப்­பனை 23 மடங்­கி­னால் அதி­க­ரிக்­கச் செய்­கின்­றது. இவ்­வா­றான மேற்­சொன்ன அள­வி­லான செயற்­கை­யான பாறை­க­ளின் விலை 2.5 மில்­லி­யன் இந்­தி­யன் ரூபா­வா­கும். (38 ஆயி­ரத்து 610 அமெ­ரிக்க டொலர்­கள் அல்­லது சுமார் 5.4 மில்­லி­யன் இலங்கை ரூபாய் அத்­து­டன் இவை ஆகக் குறைந்­தது 25 வரு­ட­கால வாழ்­வு­கா­லம் கொண்­டவை. மன்­னார் வளை­குடா, பாக்கு விரி­குடா மற்­றும்; பாக்கு நீரிணை என்­ப­ன­வற்­றைப் பொருத்­த­வரை, இந்த செயற்­கை­யான பாறை­கள்; ஆழம் குறைந்த கடற்­ப­கு­திக்கே பொருத்­த­மா­னவை.

மேல­தி­க­மாக. கடல் மீன் வளத்­தினை அதி­க­ரிக்க, செயற்­கை­யான உரு­வாக்­கப்­ப­டும் பாறை­கள், இழு­வலை மடி­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் கட­லடி மீன்­பி­டிப்­பி­னை­யும் தடுக்­கின்­றது.

செயற்­கை­யான பாறை­கள் காணப்­ப­டு­மி­டத்­தில் இழு­வலை மடி­கள் செயற்­பட மாட்டா. கார­ணம், செயற்­கை­யான வலை­கள் காணப்­ப­டு­மி­டங்­க­ளில் இழு­வ­லை­கள் அதி­க­ள­வி­லான சேதத்­துக்கு உள்­ளா­கின்­றன, சில­ச­ம­ யங்­க­ளில் இழு­வலை மடி­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. அத­னால் இலங்­கை­யின் வட­மா­கா­ணத்­தின் மீன்­ப­டிச் சமூ­க­மும், அதே­போல மீன்­பி­டித்­துறை அதி­கா­ரி­க­ளும் மன்­னார் வளை­குடா, பாக்கு விரி­குடா மற்­றும் பாக்கு நீரிணை ஆகிய பகு­தி­க­ளில் செயற்­கை­யான பாறை­களை உரு­வாக்­கு­வது குறித்து சிந்­திக்க வேண்­டும். இதன்­மூ­லம் தமிழ்­நாட்டு மீன­வர்­கள் இழு­வலை மடி­க­ளால் மேற்­கொள்­ளும் சட்­ட­வி­ரோத மீன­பி­டி­யைத் தடுக்க முடி­வ­தோடு மீன் வளத்­தை­யும் பெருக்க முடி­யும்;.

இந்த செயற்­கை­யான பாறை­கள், ஈடாட்­டம் காணும் சட்ட முக­வ­ர­கங்­கள், சட்ட நடை­மு­றை­க­ளில் உள்ள தாம­தங்­கள், குறு­கிய அர­சி­யல்; இலா­பங்­கள் என்­ப­ன­வற்­றில் இருந்து மீன்­பி­டிச் சமூ­கத்­தி­னைக் காக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இந்த விஞ்­ஞான மற்­றும்; தொழில்­நுட்ப அணு­கு­மு­றை­யா­னது, இலங்­கை­யின் வடக்­கே­யுள்ள மீனவ சமூ­கத்­துக்­கும் இலங்கை மீன்­பிடி துணைப்­பி­ரி­வின், ஒட்­ட­மொத்த விநி­யோ­கச் சங்­கி­லிக்­கும். வெற்­றி­யைப்­பெற்­றுத் தரும் சாத்­தி­யத்தை கொண்­டுள்­ளது. (விளை­யாட்­டுத் தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் பூச்­சி­யம் அல்­லாத விளை­யாட்டு)

இது கடல்­சார் விவ­கா­ரங்­கள் (Maritime Affairs) எனும் பன்­னாட்டு அறி­வு­சார் இத­ழில், குளிர்­கா­லம் 2018இல், பிர­சு­ரிக்­கப்­பட்ட ஆய்­வுப் பத்­தி­ரி­கை­யி­னது சுருக்­கம் ஆகும்.

You might also like