இலங்கை தேர்­தல்­க­ளும் -ஐ.நா. தீர்­மா­னங்­க­ளும்!!

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை விவ­கா­ரம் முதன் முத­லில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­ப­டத் தொடங்­கி­யது 2009ஆம் ஆண்­டில். போர் முடிந்­தி­ருந்த கையோடு இலங்­கை­யில் நடந்து முடிந்­தி­ருந்த மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் கொழும்­பைக் கண்­டிக்­கும் வகை­யில் ஒரு தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு மனித உரிமை அமைப்­பு­கள் முயற்­சித்­தன. ஆனால், அந்த முயற்சி தோல்­வி­ய­டைந்­தது. கண்­ட­னத் தீர்­மா­னத்­துக்­குப் பதி­லாக, பயங்­க­ர­வா­தம் என்று இலங்கை அரசு கூறி தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டத்தை வெற்­றி­க­ர­மாக ஒடுக்­கி­ய­மைக்­குப் பாராட்­டுத் தெரி­விக்­கும் தீர்­மா­னமே நிறை­வே­றி­யது, பிள்­ளை­யார் பிடிக்­கப் போக அது குரங்­கான கதை­யாக.

அதன் பின்­னர் ஜெனி­வா­வில் கொழும்பை இலக்கு வைப்­பது பொலி­வி­ழந்­தி­ருந்­தது. ஆனால், கொழும்­பின் சீனச் சார்பு நிலை உச்­சம் பெற்­றதை 2012ஆம் ஆண்­டில் மீண்­டும் கொழும்பு மீதான நெருக்­க­டி­கள் ஜெனி­வா­வில் தீவி­ரம் பெறத் தொடங்­கின. அதே­யாண்­டில் இலங்கை தொடர்­பில் முதற்­ற­ட­வை­யா­கத் தீர்­மா­னம் ஒன்­றும் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதன் பின்­னர் 2013ஆம் ஆண்டு ஜெனி­வா­வில் மீண்­டும் ஒரு தீர்­மா­னம் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்­டது. அந்­தத் தீர்­மா­னம் தமி­ழர்­க­ளி­டம் பெரும் எதிர்­பார்­பை­யும் ஆழ­மான நம்­பிக்­கை­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

2013 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான தீர்­மா­னம் ஜெனி­வா­வில் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அது மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்கு எதி­ரா­கத் தமி­ழர்­க­ளுக்­குக் கிடைத்த வெற்­றி­யா­கக்­கூ­டப் பார்க்­கப்­பட்­டது என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. அந்­தத் தீர்­மா­னத்­தால் நடக்­கப்­போ­வது எது­வு­மில்லை என்­பதை அர­சி­யல் அவ­தா­னி­கள் பல­ரும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சில­ரும் தொடர்ந்து சுட்­டிக்­காட்டி வந்­த­போ­தும்­கூட, தமி­ழர்­கள் சார்­பில் சாத­க­மாக நிக­ழ்ந்த அர­சி­யல் நிகழ்வு என்று அணு­கப்­பட்­ட­மையை மறுத்­து­விட முடி­யாது.

அது வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் கால­மா­க­வும் இருந்­தது.
ஆயு­தப் போராட்­டத் தோல்­வி­யால் நலிந்­து­போய்க் கிடந்த தமிழ் இனத்­துக்கு 2013 ஐ.நா. தீர்­மா­னம் புதிய நம்­பிக்­கை­யை­யும் உத்­தே­வ­கத்­தை­யும் கொடுத்­தது. இலங்­கை­யில் இறு­திப் போரின்­போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­கள் தொடர்­பில் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை நடத்­து­மாறு அந்­தத் தீர்­மா­னம் கேட்­டது. அத்­த­கைய ஒரு விசா­ர­ணையை இலங்கை அரசு நடத்­த­வில்லை என்­ப­த­னால் அடுத்த ஆண்டே அதா­வது 2014ஆம் ஆண்டே இலங்­கை­யில் நடந்த குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்­கை­யி­டு­மாறு ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளரை மற்­றொரு தீர்­மா­னம் கேட்­டுக்­கொண்­டது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் வரை­யில் இந்த உத்­வே­கம் தக்க வைக்­கப்­பட்­டது. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னம் குறித்தே இப்­போது அனை­வ­ரும் பேசி வரு­கின்­ற­னர். இந்­தத் தீர்­மா­னத்­துக்கு கொழும்பு அர­சும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அதற்கு முன்­னர் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் மூன்­றிற்­கும் ராஜ­பக்ச ஆட்சி முழு எதிர்ப்­பைக் காட்டி வந்­தது. அத­னால் அந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 2015இல் ஆட்சி மாறி­ய­தும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த மைத்­திரி – – ரணில் ஆட்­சி­யும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வில்லை.

இரண்­டுக்­கும் பெரி­தாக வித்­தி­யா­சங்­கள் ஏது­மில்லை. கொழும்பு அரசு தானே ஏற்­றுக்­கொண்டு இன்­னும் ஒரு படி மேலே­போய் தானும் இணைந்து நிறை­வேற்­றிய தீர்­மா­னத்­தின் பெரும் பகு­தியை நிறை­வேற்­றா­ம­லேயே 4 வரு­டங்­க­ளைக் கடத்­தி­விட்­டது. ஆனா­லும் அதற்கு எதி­ரா­கப் பன்­னாட்டு விசா­ரணை நடத்­து­வ­தற்­கான எத்­த­னங்­கள், நகர்­வு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இல்லை.

இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே இப்­போது மீண்­டும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பான விவ­கா­ரம் பர­ப­ரப்­பாக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பா­கத் தமிழ்க் கட்­சி­கள் மிகப் பர­ப­ரப்­பா­கக் கொழும்பு மீதான கண்­கா­ணிப்பு இன்­னும் நீடிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கின்­றன அல்­லது கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்று கடி­தம் எழு­து­கின்­றன.

ஜெனிவா மீண்­டும் தமி­ழர்­க­ளி­டம் பெரும் பர­ப­ரப்பை உரு­வாக்­கு­கின்­றது. தெற்­கி­லும் அதே­போன்று ஒவ்­வொரு கட்­சி­கள் ஒவ்­வொன்­றைக் கூறு­கின்­றன. எல்­லாத் தரப்­புக்­க­ளும் ஜெனி­வா­வுக்­குத் தமது பிர­தி­நி­தி­களை இம்­முறை அனுப்­ப­வுள்­ளன என்­றும் செய்­தி­கள் வரு­கின்­றன.
நன்­றா­கக் கவ­னி­யுங்­கள்! 2013 மாகாண சபைத் தேர்­தல் காலம், இப்­போ­தும் மாகாண மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளும் அரச தலை­வர் தேர்­த­லும்­கூட வரப்­போ­கின்ற காலம்.

You might also like