இலவசமாக மணல் வழங்கும்தென்மராட்சிப் பிரதேச நபர்

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் துரித கிரா­மிய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் கீழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட கோயில்­கள் மற்­றும் பாட­சா­லை­க­ளின் சீர­மைப்பு பணி­க­ளுக்­கென தனது சொந்­தக் காணி­யி­லி­ருந்து மணல் இல­வ­ச­மாக வழங்க அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த நலன்­வி­ரும்பி ஒரு­வர் முன்­வந்­துள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் யாழ்.மாவட்ட அமைப்­பா­ளர் கு.சர்­வா­னந்­த­னின் முயற்­சி­யி­னால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் துரித கிரா­மிய வேலைத்­திட்­டத்­தின் கீழ் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட 2 பாட­சா­லை­க­ளுக்­கும், பத்து கோயில்­க­ளின் சீர­மைப்பு பணி­க­ளுக்­கென தலா இரண்டு லோட் மணல் இல­வ­ச­மாக வழங்க முன்­வந்­துள்­ளார் எனத் தெரி­விக்­கப்­பட் டது.

துரித கிரா­மிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தில் சீர­மைப்பு பணி­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட கோயில்­கள் மற்­றும் கோயில்­க­ளின் நிர்­வா­கத்­தி­னர் தொடர்பு கொள்­ளும்­பட்­சத்­தில் அந்­தக் கோயில்­கள் பாட­சா­லை­க­ளுக்கு மணல் வழங்க நட வடிக்கை மேற்­கொள்­வ­தா­க­வும் அமைப்­பா­ளர் கு.சர்­வா­னந்­தன் தெரி­வித்­தார்.

கம்­ப­ரெ­லிய அபிவிருத்தி வேலைத் திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்ள போதி­லும், பிரதேசத்­தில் மணல் பெறு­வ­தில் காணப்­பட்ட சிர­மங்­களை தவிர்க்­கு­மாறு விடுத்த வேண்­டு­கோ­ளை­ய­டுத்து முன்­னேற்­பா­டாக தலா 2 லோட் மணல் பெற்­றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தெ­ன­வும் தெரி­வித்­தார்.

You might also like