இவர்­களா நீதி வழங்­கப்­போ­கின்­றார்­கள்?

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில், இரா­ணு­வத்­தின் ஊட­கப் பேச்­சா­ளர் கலந்து கொள்ள மாட்­டார் என்று தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அதைச் சமா­ளிக்­கும் விதத்­தில், இரா­ணு­வத்­தின் ஊட­கப் பேச்­சா­ளர் தேவைப்­பட்­டால் மாத்­தி­ரம் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கலந்து கொள்­வார் என்று இரா­ணு­வத் தள­ப­தி­யின் அறி­விப்பு பின்­னர் வெளி­யா­கி­யுள்­ளது.

இரா­ணு­வத்­தின் இந்­தத் திடீர் நட­வ­டிக்கை ஏன்? சோழி­யன் குடுமி சும்மா ஆடாது என்­பார்­கள். இரா­ணு­வத்­தி­ன­ரின் இந்த நகர்­வுக்­குப் பின்­னா­லும் கார­ணம் இருக்­கின்­றது.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு சில தினங்­க­ளுக்கு முன்­னர் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நடை­பெற்­றது.

அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்­ன­வுக்­கும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளும் இடை­யில் இந்­தச் சந்­திப்­பில் கடும் முறு­க­லும் ஏற்­பட்­டி­ருந்­தது.

இறு­திக் கட்­டப்­போ­ரில் இரா­ணு­வத்­தி­ன­ரால் பொது­மக்­கள் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர் என்று அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்­தார்.

‘போரின் போது பொது­மக்­கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்று, இரா­ணு­வத்­தில் உள்ள எவ­ரும் கூற­மாட்­டார்­கள். உல­கில் உள்ள எந்த இரா­ணு­வ­மும் அவ்­வாறு கூறாது. இது ஒரு போர்’ என்­றும் ராஜித குறிப்­பிட்­டி­ருந்­தார். ராஜி­த­வின் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில், இரா­ணு­வப் பேச்­சா­ள­ரி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

‘நான் இங்கு ஒரு மோத­லில் ஈடு­பட விரும்­ப­வில்லை. இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அமைச்­சர் எதை­யும் குறிப்­பிட்­டார் என்று நான் நினைக்­க­வில்லை. ஒரு போரில் சில சம்­ப­வங்­க­ளில் இழப்­பு­கள் ஏற்­ப­ட­லாம் என்று புரிந்து கொண்­டேன்’ என்று இரா­ணு­வப் பேச்­சா­ளர் சுமித் அத்­தப்­பத்து பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

இந்த விட­யமே இப்­போது வில்­லங்­க­மா­கி­யி­ருக்­கி ன்­றது. போரின்­போது இரா­ணு­வத்­தி­ன­ரால் பொது­மக்­கள் கொல்­லப்­பட்­டார்­கள் என்ற சாதா­ரண உண்­மை­யைக் கூட இரா­ணு­வம் ஏற்­றுக் கொள்­ள­ம­று­க்கின்­றது.

இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, போர்க்­குற்­றம் தொடர்­பில் உள்­நாட்டு விசா­ர­ணைப் பொறி­மு­றைக்கு தாங்­கள் தயார் என்று பல தட­வை­க­ள் குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் அவ­ரது பேச்­சுக்கு எதிர்­மா­றாக செயல் அமைந்­தி­ருக்­கின்­றது.

அமைச்­சர் ராஜித கூறிய உண்­மையை, ஏற்­றுக் கொண்ட இரா­ணு­வப் பேச்­சா­ள­ருக்கு இரா­ணு­வத் தள­பதி வாய்ப்­பூட்­டுப் போட்­டி­ருக்­கின்­றார். எந்­த­வொரு படை­யி­ன­ரும், உண்­மை­யைச் சொல்­வ­தையோ, அதை ஏற்­றுக் கொள்­வ­தையோ இரா­ணு­வம் விரும்­பத்­த­காத வடி­வத்­தில் பார்க்­கின்­றது என்­பதை, இந்­தத் தடை­யூ­டாக இரா­ணு­வத்­த­ள­பதி செய்­தி­யா­கச் சொல்­லி­யி­ருக்­கின்­றார்.

நாட்­டின் அர­சி­யல் தலை­மை­கள், பன்­னாட்டு விசா­ர­ணையை உள்­நாட்டு விசா­ரணை என்று சுருக்­கி­யுள்­ளன. உள்­நாட்டு விசா­ரணை நடந்­தால், படைத்­த­ரப்­பி­னர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டால், என்ன நடக்­கும் என்­ப­தற்கு இந்த விவ­கா­ரம் வெறும் ‘ஸாம்­பிள்’.

இத்­த­கை­ய­தொரு சூழ­லில், இலங்கை அரசு இறு­திக்­கட்­டப் போர் தொடர்­பில் நியா­ய­மான விசா­ர­ணையை நடத்­தும் என்று இன்­ன­மும் நம்­பிக் கொண்­டி­ருப்­பது அடி­முட்­டா­ற்தன­மின்றி வேறு­எ­து­வு­மில்லை.

அர­ச­மைப்பு முயற்­சி­கள் முடங்­கி­வி­டும் என்று, போர்க்­குற்­றம் பற்­றியே பேசா­மல், அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கா­மல் விட்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இப்­போது என்ன செய்­யப் போகின்­றது?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close