side Add

இவர்­கள் ஏன் இப்­படி!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்கு எதி­ராக மற்­றொரு வழக்­கைத் தாக்­கல் செய்­துள்­ளார் மாகா­ணத்­தின் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன். தன்­னை அமைச்­சர் பத­வி­யில் இருந்து நீக்­கி­யமை தவறு என்று தெரி­வித்து அவர் தாக்­கல் செய்த வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கால உத்­த­ர­வைச் செயற்­ப­டுத்த மறுத்து நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­து­விட்­டார் என்­கிற குற்­றச்­சாட்­டின் கீழ் இந்­தப் புதிய வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதனை நீதி­மன்­றம் விசா­ர­ணைக்­கும் எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் முடி­வ­டை­வ­தற்கு இன்னமும் 40 நாள்­களே இருக்­கும் நிலை­யி­லும், இந்த வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சுப் பத­வி­யைத் திரும்­பப் பெற்று இந்த 40 நாள்­க­ளுக்­குள் மக்­க­ளுக்கு அவ­ச­ர­மா­கச் சேவை­யாற்­ற­வேண்­டும் என்­ப­தற்­காக இந்த வழக்கு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி.

அதே­போன்று இந்­தப் பிரச்­சி­னையை எந்­த­வ­ழி­யி­லா­வது முடி­வுக்­குக் கொண்டு வந்து எஞ்­சி­யி­ருக்­கும் இறுதி நாள்­க­ளில் மிச்­சம் மீதி­யாக மக்­க­ளுக்கு எதை­யா­வது செய்­வோம் என்­கிற மக்­கள் சிந்­த­னை­யு­டன் இந்த வழக்­கு­களை எவ­ரும் எதிர்­கொள்­ள­வில்லை என்­ப­தும் வெள்­ளி­டை­மலை. ஒரு­வித “ஈகோ” பிரச்சினை கார­ண­மா­கவே வடக்கு அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை தொடர்ந்­தும் இழு­பட்­டுச் செல்­கின்­றது என்­பது மக்­க­ளுக்­குத் தெரி­யாத இர­க­சி­ய­மும் அல்ல.

முத­ல­மைச்­சர் தரப்­பும், டெனீஸ்­வ­ரன் தரப்­பும் விட்­டுக்­ கொ­டுப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் இருப்­ப­தா­க­வும் தெரி­ய­வில்லை. ஒரு­வர் முன்­னாள் நீதி­ய­ர­சர், மற்­றொ­ரு­வர் சட்­டத்­த­ரணி. எனவே இரு­வ­ருமே தங்­க­ளு­டைய சட்­டப் போராட்­டத்­தில் தீவி­ர­மாக இருக்­கி­றார்­கள். இரண்டு பேரு­மாக இது­வ­ரை­யில் மூன்று வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­து­விட்­டார்­கள். இத்­தோடு இது நிற்­குமா, இல்லை இன்­னும் வளர்ந்­து­கொண்டே செல்­லுமா என்­பது அவர்­கள் இரு­வ­ருக்­கும் மட்­டுமே தெரிந்த உண்மை.

இந்த விட­யத்­தில் டெனீஸ்­வ­ர­னுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. பதவி வரு­வ­தும், பதவி போவ­தும் அர­சி­ய­லில் ஒன்­றும் பார­தூ­ர­மான பிரச்­சினை அல்ல. முத­ல­மைச்­சர் என்­கிற வகை­யில் அமைச்­சர்­களை நிய­மிக்­க­வும், பிடிக்­க­வில்லை என்­றால் நீக்­க­வும் முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கும் அதி­கா­ரத்­தின் மீதும் யாரும் கேள்­வி­கேட்க முடி­யாது.

ஆனால், தன் அதி­கா­ரத்தை அழுத்­த­மா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக , டெனீஸ்­வ­ரன் மீது மக்­க­ளி­டம் தவ­றான எண்­ணத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் முத­ல­மைச்­சர் செயற்­பட்­டது அவ­ரது பத­விக்­கும் நேர்­மைக்­கும் உரிய செய­லல்ல என்­ப­தும் ஏற்­பு­டை­ய­து­தான். எனவே டெனீஸ்­வ­ர­னின் சட்­டப் போராட்­டத்­திற்கு ஒரு நியா­யம் இருக்­கின்­றது என்­ப­தில் மாற்­றுக் கருத்­தில்லை.

அதே­நே­ரத்­தில், முத­ல­மைச்­ச­ரும் சரி, டெனீஸ்­வ­ர­னும் சரி அர­சி­ய­லுக்கு வந்­தது மக்­க­ளின் நலன்­க­ளைக் கவ­னிப்­ப­தற்­கா­க­வும் அவர்­க­ளுக்­குச் சேவை­யாற்­று­வ­தற்­கா­க­வும் என்­ப­தி­லும் மாற்­றுக் கருத்து இருக்­க­மு­டி­யாது. அப்­ப­டி­யி­ருக்­கை­யில் அவர்­க­ளின் தனிப்­பட்ட “ஈகோ”­வுக்கு மேலாக மக்­க­ளின் நலன்­தானே முக்­கி­ய­மா­ன­தாக இருக்­க­வேண்­டும். இங்கோ அப்­படி நடக்­க­வில்லை என்­ப­து­தான் வருத்­தத்­துக்­கு­ரி­யது.

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை செயற்­பட முடி­யாது முடங்கி இரண்டு மாதங்­கள் ஆகப்­போ­கின்­றன. சபை­யின் பத­விக் காலம் முடி­வ­டை­யும் வரை,இந்த நிலை தொட­ர­வும்­கூ­டும். அப்­ப­டிச் சபை­யின் நட­வ­டிக்­கை­கள் முடங்­கி­யி­ருக்­கும் நிலைக்கு டெனீஸ்­வ­ரன் மற்­றும் முத­ல­மைச்­சர் இரு­வ­ருமே கார­ணம். ஆனால், அது பற்­றிக் கவ­லைப்­ப­டும் நிலை­யில் அவர்­கள் இரு­வ­ரும் இல்லை. மக்­கள் எக்­கேடு எட்­டால் எமக்­கென்ன எங்­கள் “ஈகோ”க்­களை விட்­டுக்­கொ­டுக்க மாட்­டோம் என்று நிற்­கி­றார்­கள்.

ஒரு வகை­யில், இந்­தச் சட்­டப் போராட்­டத்­தைப் பார்க்­கும்­போ­தும் இந்த அர­சி­யல் தலை­வர்­கள் எவ்­வ­ளவு தூரம் சட்­ட­வல்­லு­நர்­க­ளாக இருக்­கி­றார்­கள் என்று நினைத்­துப் பெரு­மைப்­ப­டத் தோன்­று­கி­றது. அடுத்த கணமே ,அவர்­கள் ஏன் தமது வித்­து­வத் தனங்­களை எல்­லாம் தமி­ழர்­க­ளின் உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தில் காட்ட மறுக்­கி­றார்­கள் என்று நினைக்­கும்­போது வெறுப்­பா­க­வும், விச­ன­மா­க­வும் இருக்­கி­றது. ஒரு­வேளை அவர்­கள் இந்­தத் திற­மையை எல்­லாம் தமிழ் மக்­க­ளுக்­கா­கச் செல­விட்­டி­ருந்­தார்­கள் என்­றால், என்­றைக்கோ தமி­ழர்­க­ளுக்கு உரிமை கிடைத்­தி­ருக்கக் கூடுமோ!

You might also like