side Add

ஈரானில் நிலநடுக்கம்!!

ஈரான், ஈராக் எல்லையில் று 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தப் நிலநடுக்கம் தலைநகர் பாக்தாத் வரையிலும் ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இ ஸகாப் அருகே நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

இந்த பூகம்பத்தின் அதிர்வு தலைநகர் பாக்தாத் வரையிலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக ஈரானின் சர்போல் இ ஜஹாப் மாவட்டத்தின் பெரும்பகுதியான கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்தன.

இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காயமடைந்துள்ளதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர், பொலிஸார், மீட்டுப்புப்படையினர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பூகம்பத்தால், ஈரான், ஈராக் எல்லைப்பகுதி சாலைகள், எல்லை ஓரம் இருக்கம் நகரங்கள், கிராமங்கள், வீடுகள், போன்றவை கடுமையாக சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like