ஈழத் தமி­ழர் நலன் சார்ந்து இந்­தியா சிந்­திக்­குமா?

ஈழத் தமி­ழ­ரின் அர­சி­ய­லில் அன்று தொடக்­கம் இன்று வரை­யில் பிராந்­திய அர­சி­யல் சக்­தி­யாக இருந்து இந்­தியா செல்­வாக்­குச் செலுத்தி வரு­கின்­றது. விரும்­பியோ விரும்­பா­மலோ இந்­தி­யா­வின் ஆதிக்­கம் ஈழத் தமி­ழர் அர­சி­ய­லில் இன்­றும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஈழத் தமி­ழர்­கள் விவ­கா­ரத்­தில் இந்­தி­யா­வின் அணு­கு­முறை என்­பது எப்­போதும் தனது அர­சி­யல் நலன் சார்ந்­த­தா­கவே இருந்­தி­ருக்­கின்­றது. இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இந்­தி­யா­வின் அய­லு­ற­வுக் கொள்கை வகுப்­பா­ளர்­கள் எப்­போ­துமே, ஈழத் தமி­ழர்­களை கறி­வேப்­பி­லை­யா­கவே பயன்­ப­டுத்தி இருக்­கின்­றார்­கள். இப்­ப­டி­யா­ன­தொரு சூழ­லில், ஈழத் தமி­ழர்­கள் மீண்­டும் இந்­தி­யாவை நம்­பிக் கள­மி­றங்­கு­வ­தா­னது, பொருத்­தப்­பா­டா­ன­தாக அமை­யாது.

வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கொழும்பு ஆங்­கில ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணல், ஈழத் தமி­ழர் அர­சி­யலை மீண்­டும் இந்­தி­யா­வி­டம் அடகு வைப்­ப­தற்­கான முன்­ந­கர்­க­வு­க­ளுக்கு தூபம் இடப்­ப­டு­கின்­றதோ என்ற சந்­தே­கத்தை வலு­வாக எழுப்பி விட்­டி­ருக்­கின்­றது.

அரச தலை­வர் தேர்­தல் இந்த ஆண்டு இறு­தி­யில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது. அந்­தத் தேர்­த­லில் தெற்கு மூன்­றா­கவோ அல்­லது இரண்­டா­கவோ பிரிந்து கள­மி­றங்­கத்­தான் போகின்­றது. அரச தலை­வர் வேட்­பா­ள­ரில் தமிழ் மக்­கள் எவரை ஆத­ரிக்­கப் போகின்­றார்­கள் என்­பது முக்­கி­ய­மா­னது. சிங்­கள வாக்­கு­கள் இரண்­டா­கவோ அல்­லது மூன்­றா­கவோ பிள­வ­டை­யும் சூழ­லில் தமிழ் மக்­கள் தீர்­மா­ன­மிக்க சக்­தி­யாக மாறு­வார்­கள். கடந்த அரச தலை­வர் தேர்­த­லி­லும் இதுவே நடந்­தி­ருந்­தது.

வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழர்­கள் எந்­தத் தரப்பு வேட்­பா­ளரை ஆத­ரிக்­க­வேண்­டும் என்­பது தொடர்­பில் இரண்டு வேட்­பா­ளர்­க­ளு­ட­னும் பேச்சு நடத்­து­வ­தற்கு மூன்­றாம் தரப்பு நடு­நி­லை­யா­ள­ராக இந்­தியா செயற்­ப­ட­வேண்­டும் என்று கோரிக்கையை முன்­வைத்­துள்­ளார். இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் எழு­தப்­பட்­ட­போது, ஈழத் தமிழர்­கள் சார்­பா­கக் கையெ­ழுத்­திட்­டது இந்­தியா என்ற அடிப்­ப­டை­யில், இந்­தக் கோரிக்­கையை முன்­வைப்­ப­தாக வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தார்.

இலங்கை – – இந்­திய ஒப்­பந்­தத்­தில் ஈழத் தமி­ழர்­கள் சார்­பாக இந்­தியா கையெ­ழுத்­திட்­டி­ருந்­தா­லும், இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லா­ன­தாக அந்த ஒப்­பந்­தம் அமைந்­தி­ருந்­த­போ­தி­லும், இலங்கை அரசு தன்­னிச்­சை­யாக – எதேச்ச­தி­கா­ர­மாக அந்த ஒப்­பந்­தத்தை மீறி­ய­போது, அத­னைத் தூக்­கிக் கடா­சி­ய­போது இந்­தியா மௌன­மா­கவே இருந்­தது.

வடக்கு – – கிழக்கு பிரிக்­கப்­பட்­ட­போ­தும் சரி, 13 ஆவது திருத்­தச் சட்­டத்­தின் ஊடாக மாகா­ணத்­துக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் களவாக கொழும்பு அர­சுக்கு திருப்பி எடுக்­கப்­பட்­ட­போ­தும் சரி, இந்­தியா ஒரு சாட்­டுக்­குத்­தா­னும் இலங்கை அர­சி­டம் ஏன் என்று கேட்­க­வில்லை.

இந்­திய – – இலங்கை ஒப்­பந்­தத்­தில் ஈழத் தமி­ழர்­கள் சார்­பாக கையெ­ழுத்­திட்ட இந்­தியா, ஈழத் தமி­ழர்­க­ளுக்கு அந்த ஒப்­பந்­தத்­தால் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை கொழும்பு பறிக்­கும்­போது மௌனி­யாக இருந்­தது. அப்­ப­டிப்­பட்ட இந்­தியா, அரச தலை­வர் வேட்­பா­ளர்­க­ளில் எவரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்­பில் இரண்டு தரப்­புப் பேச்­சுக்­க­ளி­லும் மூன்­றாம் தரப்பு நடு­நி­லை­யா­ள­ரா­கக் கலந்து கொண்­டா­லும், ஈழத் தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டும்­போது, பேச்சு மீறப்­ப­டும்­போது என்ன செய்­யும்? மீண்­டும் மௌனி­யா­கவே இந்­தியா இருக்­கப் போகின்­றது.

அப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலை­யில் மீண்­டும் இந்­தி­யா­வி­டம், ஈழத் தமி­ழர் அர­சி­யல் அடகு வைக்­கப்­ப­டு­வது ஏற்­றுக் கொள்­ளக் கூடி­ய­தல்ல.
இந்­தி­யாவை நம்­பி­யி­ருந்­த­தால் ஈழத் தமி­ழர்­கள் இழந்­த­வை­கள்­தான் ஏரா­ளம். ஈழத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல், வாழ்வு இந்த நில­மை­யில் வந்து, நாதி­யற்று நிற்­ப­தற்­கும் இந்­தி­யாவே முக்­கிய பங்­காளி.
இந்­தியா தொடர்­பில் வர­லாறு சொல்­லித் தந்த பாடங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இனி நடப்­பதே சிறப்பு. வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் இதனை விளங்­கிக் கொள்­ள­வேண்­டும்.

You might also like