உறைக்­கும் உண்மை!!

எருமை மாட்­டில் பெய்­யும் மழைக்­கும் மாரித் தவ­ளை­யின் ஓயாத குர­லுக்­கும் ஏதா­வது பயன் உண்டா என்­றால் இல்லை என்று யோசிக்­கா­மல் பதில் சொல்­லி­வி­ட­லாம். புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் நாடா­ளு­மன்­றத்­தில் சபை ஒத்­தி­வைப்பு வேளை­யில் பிரே­ரணை ஒன்றை முன்­வைத்து ஆற்­றிய உரை­யை­யும் அது குறித்து சிங்­கள, முஸ்­லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நடந்­து­கொண்ட விதத்­தை­யும் பார்க்­கும்­போது மேலே சொன்­ன­து­தான் நினை­வுக்கு வரு­கின்­றது.

புதிய அர­ச­மைப்பு முயற்­சி­களை இதற்கு மேல் ரணி­லின் இந்த ஆட்­சிக் காலத்­தில் முன்­ன­கர்த்­து­வது மலை­யைக் கெல்லி எலி­யைப் பிடிக்­கும் விளை­யாட்டு என்­பது தெரிந்­தி­ருந்­த­போ­தும், அடி­மேல் அடி அடித்­தால் அம்­மி­யும் நக­ரும் என்று நம்­பிக்­கொண்டு கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் விடாது முயன்­று­கொண்­டி­ருக்­கி­றார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் அவர் ஆற்­றிய நீண்ட உரை­யும் இந்­தச் சாராம்­சத்­தையே கொண்­டி­ருந்­தது. சுமார் ஒன்­றே­கால் மணி நேர உரை அது.

நாட்­டில் தற்­போது பயன்­பாட்­டில் உள்­ளது மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தொரு அர­ச­மைப்­புத்­தான் என்று ஆணித்­த­ர­மா­கக்­கூ­றிய சம்­பந்­தர், புதிய அர­ச­மைப்­பின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார். அதனை ஏற்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து அதி­கா­ரத்துக்கு வந்த இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளை­யும் அரச தலை­வ­ரை­யும் கடு­மை­யா­கக் கண்­டித்­தார். எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கப் புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மீளத் தொடங்­க­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார். அதைச் செய்­வ­தன் ஊடாக, பன்­னாட்­டுச் சமூ­கத்துக்கும் இலங்கை மக்­க­ளுக்­கும் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­ வேண்­டும் என்­றும் அவர் அழுத்­தி­னார்.

தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இது­வொரு முக்­கிய தரு­ணம். சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் தாம் தொடர்ந்­தும் ஏமாற்­றப்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்­றோம் என்று தமி­ழர்­கள் விரக்­தி­ய­டைந்­து­வ­ரும் நிலை­யில் தீர்வு முயற்­சி­களை மீண்­டும் அதன் தடத்துக்குக் கொண்டு வரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கும் இக்­கட்­டான தரு­ணம். ஆனால், சிங்­க­ள­வர்­க­ளுக்கு அது­வொரு முக்­கிய பிரச்­சி­னை­யல்ல. பத்­தோடு பதி­னொன்­றாக அது­வொரு சிறிய விவ­கா­ரம் மட்­டுமே என்­பதை நேற்­று­முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் சிங்­கள மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தெள்­ளத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­னர்.

சம்­பந்­தன் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கும்­போது நாடா­ளு­மன்­றத்­தில் ஆகக்­கு­றைந்த எண்­ணிக்­கை­யி­லான உறுப்­பி­னர்­கள்­கூட இருக்­க­வில்லை. இத­னால் சபை­யில் கோரம் இல்லை என்­கிற பிரச்­சினை கிளப்­பப்­பட்­டது. இதை­ய­டுத்து கோரம் மணி ஒலிக்க விடப்­பட ஒரு சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஓடி­வந்து தலைக் கணக்­குக்கு அமர்ந்­த­னர். அவர்­க­ளின் வரு­கை­யு­டன் கோரம் இருப்­ப­தா­கப் பதிவு செய்­யப்­பட்­ட­தும் அந்த உறுப்­பி­னர்­கள்­கூட மீண்­டும் வெளி­யே­றிச் சென்­று­விட்­டார்.

ஆக, தமி­ழர்­கள் தமது பிரச்­சி­னை­கள் குறித்­துப் பேசி­னால் அத­னைச் செவி­ம­டுத்­துக் கேட்­கக்­கூட முன்­வ­ராத ஒரு அலட்­சி­யப் போக்கு நிலை­யையே சிங்­கள மக்­கள் பிர­தி­நி­தி­கள் நேற்­று­முன்­தி­னம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். தமி­ழர்­க­ளின் பிரச்­சினை தமக்கு ஒரு பொருட்டே இல்லை என்­பதை அவர்­கள் தெளி­வாக உணர்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். இத்­த­கை­ய­வர்­க­ளைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் இருந்து தீர்வை எதிர்­பார்ப்­பது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தல்ல. எவ்­வ­ள­வு­தான் கத்­திச் சொன்­னா­லும் அவர்­க­ளின் காது­க­ளில் ஏறப்­போ­வ­தில்லை. எருமை மாட்­டில் மழை பெய்­த­து­போன்று தமி­ழர்­க­ளின் பிரச்­சினை குறித்த எந்­தக் கவ­லை­யும் இல்­லா­ம­லேயே அவர்­கள் இருக்­கப்­போ­கி­றார்­கள்.

தமி­ழர் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் மாரித் தவ­ளை­க­ளைப்­போன்று எவ்­வ­ள­வு­தான் கத்­தி­னா­லும் அவர்­கள் அத­னைக் கவ­னத்­தில் எடுக்­கப்­போ­வ­தில்லை என்­ப­தையே அவர்­கள் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அத்­த­கைய நிலை­யில் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் இருந்து தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு ஒன்று கிடைக்­கும் என்று எதிர்­பார்ப்­பது முட்­டாள்­த­ன­மன்றி வேறென்ன?

You might also like